பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் 133 கதையன்றோ சமய குரவராற் பாராட்டப்பட்டுள்ளது? அம்மட்டோ? அஃது இராசேந்திர சோழனது திருவாலங்காட்டுப் பட்டயத்திலும் குறிக்கப்பட்டுவிட்டது. பின்னர்ப் பல நூல்களில் இடம் பெற்று. இறுதியில் நம்பி பாடிய அந்தாதியிலும் பெரிய புராணத்திலும் பதிந்துவிட்டது. சமயத் தொடர்பாக இங்ங்னம் கூறப்பட்டுள்ள (1) அப்பர், அப்பூதியார் மகனை எழுப்பினமை (2) சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கினமை (3) சேரமான் முதன் முதலிற் சுந்தரரைச் சந்தித்தமை போன்ற கதைகள் நம்பிக்குப் பிறகும் சேக்கிழார்க்கு முன்னும் தோன்றி வளர்ந்தனவாகலாம். அவற்றை அக்கால மக்கள் மனப்பான்மை ஒட்டியும் சைவசமய உயர்வு கருதியும் அவை நாட்டில் வழங்கியவாறே சேக்கிழார் பாடினராகலாம். உண்மை எதுவாயினும், மேற்சொன்ன மூவகை வேறுபாடுகட்கு இக்கதைகள் ஒரு காரணமாகும் எனக் கோடல் தவறாகாது. . மூன்றாம் காரணம் : சேக்கிழார், திருமுறைகளையே அன்றிப் பிற நூல்களையும் ஆராய்ந்து குறிப்புக்கள் சேர்த்தமை, மேற்சொன்ன வேறுபாடுகட்கு ஒரு காரணமாகும். சான்றாக ஒன்று காண்க. அப்பர் காலத்துப் பல்லவ வேந்தன், முதல் மகேந்திரவர்மன் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அப்பேரரசன் சமண முனிவர் தூண்டுதலால் அப்பருக்குத் தீங்கிழைக்கக் கருதி அவரை அழைத்து வருமாறு தன் அமைச்சரையே ஏவினான். அங்ங்னம் ஏவுகையில், "தரும சேனனிடம் பொருள் கொண்டு விடாது என்பால் அழைத்துவாரும்" என்று எச்சரிக்கை செய்தனன் என்று சேக்கிழார் செப்பியுள்ளார். மகேந்திரன் பல்லவப்பேரரசன். அவனுடைய அமைச்சர் இவ்வளவு இழிந்தவர் என்பதை அவனே கூறினன் என்று சோழப் பேரரசனது முதல் அமைச்சராகிய ஒரு பெரியார் (சேக்கிழார்) தக்க சான்றின்றிக் கூறார். சான்றின்றிக் கூறினார் எனக் கொள்ளின், அஃது அவரது அமைச்சர் பதவிக்கும் புலமைக்கும் இழுக்குத் தருவதாகும். ஆதலின், இக்குறிப்பு அவர்க்கு எங்கிருந்து கிடைத்திருத்தல் வேண்டும் என்பதை ஆராய்தல் நலம். நாம் அறிந்தவரை மூன்று நூல்களில் ஒன்றே அவருக்கு இக்குறிப்பை உதவி இருத்தல் கூடும். அவை 1. பூம்புலியூர் நாடகம் 2 கன்னிவன புராணம் (3) மகேந்திரன் செய்த மத்த விலாசம்' என்ற நாடக நூல் என்பன. இவற்றுள் முன்னவை இரண்டும் இப்பொழுது இல்லை. இறுதி நூல் இன்று இருப்பதாகும். அதனில் காடாலினி ஒருத்தி பெளத்த பீrைைவப் பற்றி நீதி மன்றத்தில் வழக்குத் தொடரல் நம்மால் இயல்வதன்று. ஏன் எனில், அவன் பெளத்த விஹாரத்திற் சேர்ந்துள்ள பணத்தைக் கொண்டு நீதிபதிகள் வாயை அடைத்துவிடுவான்" என்று கூறியுள்ள கூற்றுக் கவனிக்கற்பாலது. தனது ஆட்சிக்குட்பட்ட நீதிபதிகளே கைக்கூலி பெறத்தக்கவர் என்பதை அரசனே அறிந்திருந்தான் என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று வேண்டுவதில்லை அன்றோ? இதை நோக்க, அவ்வரசனே தன் அமைச்சரை நோக்கி, தருமசேனரிடம் பொருள் கொண்டுவிடாது அழைத்துவாரும் என்று