பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பெரியபுராண ஆராய்ச்சி வாது செய்தார்" என்றனர். இங்ங்னம் சேக்கிழார் கூறற்கு மூலம் என்ன? போதி மங்கையில் சம்பந்தர் புத்தரை வென்றார் : ஒரு புத்தன் தலை புவிமீது உருளுமாறு வித்தகப் பாடல் செய்தார்" என்ற நம்பி தந்த குறிப்பே மூலமாகும். போதி மங்கை என்பது பூதமங்கலம்'. அது சேக்கிழார் குறித்தபடி தெளிச்சேரியிலிருந்து திருக்கடவூர் போகும் பாதையில் உள்ளது. அங்கு வேணுதாசன் என்றவன் கட்டிய பெளத்த விஹாரத்திற்றான் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினரான புத்ததத்தர் விநயவிநிச்சயம் என்ற நூலை எழுதினார்: எனவே, சம்பந்தர் காலத்தில் அங்குப் பெளத்தர் இருந்தனர் என்று கொள்ளற்குத் தடை இல்லை. இங்குச் சேக்கிழார், 'இப்போதி மங்கை இன்ன இடத்தில் உள்ளது' எனக் குறித்தமை பாராட்டத்தக்கது. அங்கு நடந்தனவாகக் கூறும் சைவ - பெளத்த சமயத் தொடர்புடைய நுட்பமான செய்திகள் பின்னும் பாராட்டத் தக்கவையாகும். இவ்விரண்டும் முறையே சேக்கிழாரது பிரயாணத்தாலும், பெளத்த-சைவ சமய நூல்களைப் படித்தமையாலும் குறிப்பிடப்பட்டவை என்று கோடல் தகும். போதி மங்கை பெளத்த ஸ்தலமாகச் சோழர் காலக் கல்வெட்டுகளில் இடம் பெறாமையால், அது சம்பந்தர்க்குப் பின் வீழ்நிலையுற்றதெனக் கொள்ளலாம். 9. "அப்பர் திருப்பழனத்திருந்து காவிரித் தென் கரையே சென்று திருநல்லூரை அடைந்தார். சம்பந்தர் தில்லையிலிருந்து திருமுதுகுன்றம் பேரகையில் நிவாநதிக் கரைமீது மேற்கு நோக்கிச் சென்றார்: வடகரை மாந்துறை பணிந்து பிற தளிகளையும் பாடி மழநாட்டுப் பொன்னி வடகரை மிசைப் போய்த் திருப்பாச்சில் ஆச்சிராமம் அடைந்தார்." திருவீங்கோய் மலையைத் தொழுத பிறகு கொங்கிற் குடபுலம் சென்றடைந்தார்.' வெஞ்சமாக் கூடலைப் பணிந்த பிறகு கிழக்கு நோக்கி வந்தார்; கருவூரை அடைந்தார்" காவிரிக் கரைமீது சென்றே திருத்துருத்தி குற்றாலம் அடைந்தார். பிறகு அந்நதிக்கரையில் உள்ள முவலுரைப் பணிந்தார். சுந்தரர் சேரமானுடன் சேர நாடு செல்ல ஆரூரிலிருந்து புறப்பட்டு மேற்பால் சென்றார்; காவிரித் தென்கரை போய்ச் சிவன் கோவில்கள் பல பணிந்து திருக்கண்டீயூரை அடைந்தார். வடகரையில் திருவையாறு எதிர் தோன்றியது." என்று சேக்கிழார் பெருமான் ஆற்றின் பெயர்களையும் நாயன்மார் சென்ற கரைகளையும், அக்கரைகளில் அவர்கள் தரிசித்த கோவில்களையும் அக்கரைகள் வழியே அவர்கள் சென்ற நாடுகளையும் குறித்துள்ளமையும் அவை இன்றளவும் பொருத்தமாக இருத்தலையும் நோக்க - இப்புலவர் பெருமான் தமிழகத்து நில அமைப்பு நாட்டு அமைப்பு கோவில் அமைப்பு முதலியவற்றை மிகத் தெளிவாக அறிந்த பெரியார் என்பது நன்கு விளக்கமாகும். - நாயன்மார் பதிகள் : நாயன்மார் பதிகள் சில குழப்பத்திற்கு இடமின்றிச் சேக்கிழார் குறித்துள்ளமை கவனித்தற்குரியது.