பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் 143 1. நந்தனார் இவர் பதி ஆதனுர்" என்பது. நம்பி தமது அந்தாதியில் இப்பெயர் மட்டுமே குறித்தார். தமிழகத்தில் 'ஆதனுர்' என்ற பெயர்கொண்ட ஊர்கள் பல உண்டு, அவை (1) திருநெல்வேலிக் கோட்டத்து ஆதனுர்’ (2) கருவூர்க்கூற்றத்து ஆதனூர்" (3 விருத்தாசலக் கூற்றத்து ஆதனுர் (4) பாபநாசக் தஞ்சைக் கோட்டம்) கூற்றத்து ஆதனுர்’ (5) சிதம்பரக் கூற்றத்து ஆதனுர்’ முதலியன. இவற்றில் நந்தனார் எப்பதியினர் என்று விளக்க நம்பியும் கடமைப்பட்டவராவார். ஆயின், அவர் கூறாது விட்டார். இக்குழப்ப நிலையை நீக்க விரும்பிய சேக்கிழார், கொள்ளிடத்தின் அலைகள் மோதும் இடத்திலுள்ளது ஆதனுர் . அது மேல் கானாடு' என்பதைச் சேர்ந்தது" என்று தெளிவாக ஐயத்திற்குச் சிறிதும் இடனின்றிக் கூறியிருத்தல் காண்க கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இந்த ஆதனுர்க்கு ஒன்றரைக்கல் தொலைவில் திரு ஓமாம்புலியூர் என்ற பாடல் பெற்ற பதியுள்ளது. அப்பதி மேல் கானாட்டைச் சேர்ந்தது' என்று அங்குள்ள கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டது." 2. செருத்துணையார் இவர்பதி மருகல் நாட்டுத் தஞ்சாவூர்' என்று நம்பி குறித்தார்." சேக்கிழார் மருகல்நாடு இன்ன நாட்டின் உட்பகுதி என்று படிப்பவர்க்குத் தெரியும்படி, பொன்னி நீர்நாட்டு சோழநாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்” என்று தெளிவுறுத்தியிருத்தல் கண்டு இன்புறத் தக்கது. இது சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் மருகல் நாட்டுத்தஞ்சாவூர்' என்றே பயின்றிருத்தல் கவனிக்கத் தக்கது." இம்மருகல் தஞ்சைக் கோட்டத்து நன்னிலம் கூற்றத்தில் உள்ள பதியாகும். இதுவே திருமருகல் என்ற பாடல் பெற்ற பதி. 3. பெருமிழலைக் குறும்பர் இவர் மிழலை' என்ற ஊரினர் என்பது நம்பி கூற்று” சுந்தரர் தமது நாட்டுத் தொகைப் பதிகத்தில், மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலை" என்று பாடியுள்ளார். இதனால் மிழலை என்ற பெயருடன் இரண்டு பதிகள் இருந்தமை தெளிவு. இதனைக் கவனித்த சேக்கிழார், குறும்ப நாயனாரது ஊர் எஃது என்பதை ஆராய்ந்து மிழலை நாட்டுப் பெரு மிழலை' என்று கூறிச்சென்றார். இது கும்பகோணக் கூற்றத்தில் உள்ளது. இப்பொழுது மிழலை என்ற பெயருடன் அழிந்த நிலையில் உள்ளது. அங்கு அழிந்த சிவன் கோவில் இருக்கின்றது. அதன் அறை ஒன்றில் பெருமிழலைக் குறும்பர் படிமம் இருக்கின்றது. மிலட்டூர் - பெருமிலட்டுர் எனவும், ஆர்காடு-பேரார்காடு எனவும், அரசூர்- பேரரசூர் எனவும் வழங்கினாற்போல இன்றைய மிழலை பண்டைக் காலத்திற் பெருமிழலை' என வழங்கப்பட்டது போலும்'