பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பெரியபுராண ஆராய்ச்சி சாய்க்காட்டுக் கோவிலைப் பார்ப்பவர்." சேக்கிழார் விளக்கியுள்ள இடநிலைமை பெரிதும் பொருத்தமானதே என்பதை நன்குணர்வர். 9. விறல் மிண்டர் இவர் பதி "செங்குன்றம்" என்று நம்பி குறித்தார். அவ்வளவே. அது சேரநாட்டுச் செங்குன்றுாரா? கொங்கு நாட்டுச் செங்குன்றுரா? என்று படிப்போர்க்கு ஐயமுண்டாதல் இயல்பு. இவ்வையத்தை அறவே அகற்றச் சேக்கிழார், சேரர் நாட்டின்கண் உள்ள ஊர்களில் முன் வைத்து எண்ணத் தக்கது இச் செங்குன்றுர்" எனத் தெளிவாகக் கூறியிருத்தல் காண்க. திருவிசய மங்கை : இப்பெயருடன் திருப்புறம்பயத்திற்கும் திருவைகாவூருக்கும் இடையில் மண்ணியாற்றங்கரையில் ஓர் ஊர் உள்ளது. அதனில் சிவன் கோவில் ஒன்று இருக்கின்றது. அஃதன்றிக் கொள்ளிடத்தில் வட கரையில் உள்ள கோவந்த புத்தூரில் பழைய சிவன் கோவில் ஒன்று உண்டு. அக்கோவிலின் பெயரும் "விசயமங்கை" என்பதே. இதுவே பாடல் பெற்றது என்பது, அப்பர் பாடலால் தெளிவாகத் தெரிகிறது." இந்த நுட்பத்தை சேக்கிழார் தெளிவாக அறிந்து சம்பந்தர் யாத்திரை வழியைக் குறிப்பது காணத்தக்கது. - "சம்பந்தர் திருப்பழுவூரைத் தரிசித்துவிட்டு விசய மங்கையை அடைந்தார். பிறகு திருவைகாவூரையூம் அதன் பிறகு திருப்புறம்பயத்தையும் தரிசித்தார்." இதுதான் நேரான வழியாகவுள்ளது. மண்ணியாற்றங்கரையில் உள்ள திருவிசய மங்கையாயின் மேற்கில் உள்ள திருவைகாவூருக்கு முதலில் வந்துதான் பிறகு விசயமங்கைக்கு வரநேரும். இதனால், கொள்ளிடக் கரையில் உள்ள கோவந்தபுத்தூரில் உள்ள விசயமங்கை என்ற கோவிலே சம்பந்தர் தரிசித்ததாகும். மேலும், அதுவே அப்பர் குறித்த கோவில் என்பது அக்கோவில் கல்வெட்டுக்களாலும் உறுதிப்படுகின்றது." இங்ங்னம் மயங்கத்தக்க இடங்களை எல்லாம் தெளிவாகக் கூறிச் சென்ற சேக்கிழார் தல அறிவு நிரம்பப் பெற்றவர் எனக் கோடல் பொருத்தமே அன்றோ? நாயன்மார் மரபுகள்: நம்பி தமது திருத்தொண்டர் திரு அந்தாதியில் ஏறத்தாழ 35 நாயன்மாருடைய மரபுகள் குறித்திலர். ஆயின், சேக்கிழார் எறிபத்தர், குலச்சிறையார், திருமூலர், தண்டி, கணம்புல்லர், காரி நாயனார் ஆகிய அறுவர்க்கே மரபு கூறாது ஏயை அனைவர்க்கும் மரபு குறித்தார். இஃது எங்ங்ணம் இயன்றது? அவர் தாம் தலயாத்திரையின்போது அவ்வந் நாயன்மார் பதிகளிற் கேட்டறிந்தனர் போலும் அங்ங்னம் கேட்டும் மேற்சொன்ன அறுவர் மரபு அறியக்கூடவில்லை போலும் இவ்வறுவர்