பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் 147 மரபுகளையும் அவர் ஊகமாகக் கூறியிருக்கலாம் அல்லவா? பொறுப்புள்ள அப்பெரும் புலவர் அங்ங்னம் செய்ய விரும்பவில்லை. நாயன்மார் பற்றிய சில குறிப்புகள்: திருநீலகண்டர் இளமை துறந்த வரலாறு, நந்தனார் செய்த திருப்பணிகள், சாக்கியர் காஞ்சியில் சிவனைப் பூசித்து முத்தி பெற்றமை, சுந்தரர் சங்கிலியார் திருமணம் போன்ற மூல நூல்களில் விளக்கமாக இல்லாத பல செய்திகள் சேக்கிழார் மூலமாகவே முதன்முதல் அறியப்படுகின்றன. இவ்விரங்களை நோக்க, சேக்கிழார் இவற்றைத் தம் தல யாத்திரையின் போது விசாரித்தறிந்தனர் என்று நம்ப இடமுண்டாகிறது. மடங்கள். சேக்கிழார் காலத்தில் சோழப் பெருநாட்டில் பல மடங்கள் இருந்தன என்பதை ஆறாம் பிரிவிற் குறித்தோம் அல்லவா? அவை எல்லாம் நாயன்மார் காலத்தில் இருந்தவை என்று சேக்கிழார் தம் நூலிற் குறிக்காமை நோக்கத்தது. அவர் திருவதிகை, சித்தவடம், திரு நல்லூர், சீகாழி, திருப்புகலூர், திருக்கடவூர், திரு மறைக்காடு, திருப்பூந்துருத்தி, திங்களுர், திருமருகல், திருவாரூர், திருவிழிமிழலை, மதுரை, காஞ்சி, காளத்தி, சாத்தனூர், கொடுங்கோளுர், ஒற்றியூர் என்ற இடங்களிற்றாம் நாயன்மார் காலத்தில் மடங்கள் இருந்தன என்று கூறியுள்ளார். இவற்றுள் திருவதிகை, திருப்புகலூர், சாத்தனூர், கொடுங்கோளுர், ஒற்றியூர் என்ற இடங்களில் இருந்த மடங்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ள செய்தி ஏழாம் பிரிவிற் கண்டோம் அல்லவா? அவை சோழர் காலத்தில் புதியனவாக உண்டாக்கப்பட்டன என்று அக்கல்வெட்டுகளில் குறிக்கப் படாமையால், அவை பழையனவே எனக் கோடல் தவறாகாது. கல்வெட்டுகளில் கண்ட மடங்கள் இருந்தாற்போலவே, சேக்கிழார் குறித்த-ஆனால் கல்வெட்டுகளில் இடம் பெறாத பிற மடங்களும் இருந்தன எனக் கோடலில் தவறொன்றும் நேராது. (1 "அப்பர் அமைத்த திருமடம்" என்ற திருப்பூந் துருத்தியில் அழிவுற்ற நிலையில் இன்றும் ஒன்று இருக்கின்றது (2) திருவதிகையில் 'திலகவதியார் மடம்" கோவிலுக்கு எதிரில் இடிந்து பாழடைந்த கிடக்கிறது (3) அமர்நீதியார் மடம் திருநல்லூரில் பாழ்பட்ட நிலையில் இருக்கின்றது. இச்சான்றுகளை நோக்கச் சேக்கிழார் குறித்த பிறமடங்கள் இருந்து அழிந்தன என்பதை அறியலாம். சேக்கிழாரும் தஞ்சைப் பெரிய கோவில் ஒவியமும் ஏழாம் பகுதியில் தஞ்சைப் பெரிய கோவில் ஒவியங்கள் குறிப்பிடப்பட்டன அல்லவா? அவற்றைச் சேக்கிழார் எங்ங்னம் பயன்படுத்தினார் என்பதைக் காண்போம். 1. சுந்தரரை இறைவன் முதுமறையவனாக வந்து ஒலை காட்டி ஆட்கொண்ட செய்தியை விளக்கும் ஓவியக் குறிப்புக்கும் சேக்கிழார் கூற்றுக்கும் வேறுபாடு இல்லை.