பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் பற்றிய செய்திகள் (கி.பி. 400-865) 1. இருண்ட காலச் செய்திகள் (கி.பி. 400-600) இப்பகுதியில் 1 மூர்த்தியார் (2 கூற்றுவர் 3 கோச்செங்கணான் (4) புகழ்ச்சோழர் 5 தண்டியடிகள் காலத்துச் சோழ அரசன் (6) ஐயடிகள் காடவர்கோன் என்போர் அடங்குவர். இவர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை முறையே காண்போம். - 1. மூர்த்தியார் இவ்வறுவருள் மூர்த்தியார் முற்பட்டவர் எனக் கூறலாம். "இவர் காலத்தேதான் வடுகக் கருநாடர் வேந்தன் கடல் போன்ற தானையோடு வந்து பாண்டிய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் மூர்த்தியாரது சிவத் தொண்டுக்கு இடையூறு செய்தான்; அவன் சிவ வழிபாட்டை ஒழிக்க முயன்றவன், சமணச் சார்புடையவன்” என்பது சேக்கிழார் கூற்று' இங்ங்ணம் பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் கைப்பற்றியவன் அச்சுதவிக்கந்தன் என்பது புத்ததத்தர் கூற்றாலும் தமிழ் நாவலர் சரிதையில் உள்ள பழம் பாக்களாலும் முன்பு அறியப்பட்டதே. அவன் காலத்தில் வைதிக சமயம் ஒடுக்கப்பட்டுப் பிரமதேயம் அழிக்கப்பட்டதும், இங்ங்ணம் புதியராகப் புகுந்த இக்களப்பிர மரபினர்க்கும் குடிகட்கும் மனஒற்றுமை இல்லை என்பதும் வேள்விக்குடிப் பட்டயத்தால் நன்குணரலாம். இச் செய்தியை நோக்கச் சேக்கிழார் கூறும் மூர்த்தியார் பற்றிய செய்தி உண்மையாக இருத்தல் கூடும் என்று எண்ண இடமுண்டாகிறது." சென்ற பகுதியில் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் இன்னவர் என்பது கூறப்பட்டது. இங்கு அவர்களைப் பற்றிச் சேக்கிழார் கூறும் சில குறிப்புக்கள் எந்த அளவு தென் இந்திய வரலாற்றுக் குறிப்புகளுடன் ஒன்றுபடுகின்றன (how tar historical) என்பதைக் காண்போம்.