பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 153 களப்பிரர் இடையீடு இக்களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றியதால் பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோர் தம்முரிமை இழக்க நேர்ந்தது. ஆயின் பல்லவரும் பாண்டியரும் ஏறத்தாழக் கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இக்களப்பிரரை ஒடுக்கித் தங்கள் நாட்டைக் கைப்பற்றி விரிவாக்கினர் என்பது சிம்மவிஷ்ணு என்ற பல்லவன் வரலாற்றாலும் கடுங்கோன் என்ற பாண்டியன் வரலாற்றாலும் அறியலாம். ஆயின், சோழர் பலன் பெற்றிலர். அவர் நாட்டின் பெரும் பகுதி களப்பிரர் ஆட்சியிலிருந்து விடுபட்டுப் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது. பாவம் இத்தாழ்ந்த நிலையில் அவர்கள் ஏறத்தாழக் கி.பி. 900 வரை இருக்க வேண்டியவர் ஆயினர். அவர்கள் வடக்கே பல்லவப் பேரரசிற்கும் தெற்கே பாண்டியப்பேரரசிற்கும் இடையில் மிகச் சிறிய நிலப் பகுதியை ஆண்டுவந்தனர். அவர்தம் பழைய மரபின் சிறப்புக் கருதிப் பல்லவரும் பாண்டியரும் அவர்களைப் பெரும்பாலும் வருத்தாது விட்டனர். அவ்வப்போது அவர்களிடம் பெண்கொண்டும் வந்தனர்; தம்மிடம் அரசியல் அலுவலை விரும்பிய சோழ மரபினர்க்கு உயர் பதவிகள் வழங்கியும் வந்தனர். இங்ங்னம் சோழர் பேரரசர் சிறப்பின்றி இருந்தமையாற்றான். மங்கையர்க்கரசியார் இன்னவர் மகளார் என்று சம்பந்தர்க்கு அறிமுகப்படுத்த முயன்ற குலச்சியைார் வேறு சிறப்பொன்றும் கூறாது. - பருங்கை யானைவாழ் வளவர்கோன் பாவையார்" என்று சோழனது யானைச் சிறப்பை மட்டுமே கூறினர் எனச் சேக்கிழார் நுட்பமாகக் குறித்திருத்தல் கவனிக்கத் தக்கது. - 2. கூற்றுவ நாயனார் இவரைப் பற்றி முன்னரே கூறப்பட்டது 3. கோச்செங்கணான் (1) இவருடைய பெற்றோர் பெயர் (2) இவர் காலத்தில் தில்லை உயர்வடைந்தமை என்ற இரண்டு குறிப்புகள் சேக்கிழார் கூறுவன. 4. புகழ்ச் சோழர் (1) இவர் கருவூரையும் பிடித்தாண்டவர் (2) அதிகன் திறை கட்டாததால் அவனை வென்றவர் 3 கொல்லப்பட்ட பகைவருள் ஒருவன் நெற்றியில் திருநீறு கண்டு அடியாரைக் கொன்ற பாபத்திற்கஞ்சித் தீக்குளித்தவர் என்பன சேக்கிழார் கூறும் புதிய செய்திகள். - 5. தண்டியடிகள் காலத்துச் சோழன் திருவாரூரில் தண்டியார்க்கும் சமணர்க்கும் நடந்த வாதில் ஒரு சோழ அரசன் நடுவனாக இருந்தான் சமணரை ஊரை விட்டு விரட்டின்ான்.