பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 175 சிறுத்தொண்டர் முதலியோர் வரலாறுகளால் நன்கறியலாம். இவ்வேடத்தினர் சேக்கிழார் காலத்தில் இருந்தனர் என்பது ஏழாம் பிரிவிற் கல்வெட்டுச் சான்றுகளால் காட்டப் பெற்றது. அவர்கள் அப்பர் முதலியோர் காலத்தில் இருந்தவர்கள் என்பதற்குச் சான்றென்னை? எனின், அப்பர் பதிகமே சான்றென்னலாம். விரிசடைவிர திகளந்தணர் சைவர்.பாசுப தர்கபாலிகள் தெருவினிற் பொலியும் திருவாரூர் அம்மானே!" அப்பர் இங்ங்ணம் கூறுதலை, அவர் காலத்தவனான மகேந்திரவர்மன் தனது மத்தவிலாச நாடகத்தில் மெய்ப்பித்துள்ளான். அவன் தன் காலத்தில் காஞ்சியில் காபாலிகர் பாசுபதர் இருந்தனர் எனக் குறித்தமை காண்க காணவே, சேக்கிழார், நாயன்மார் வரலாறுகளை, அந்நாயன்மார் கால நிலைமை உளங்கொண்டே தக்க சான்றுகள் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் பாடினார் என்பது அறியப்படும். கணநாதர் சமயப் பயிற்சி இவர் சீகாழிப் பதியினர் தம்மை நாடி வந்தவர்க்கு (1) நந்தவனப்பணி (2) மலர் கொய்தல் (3) பலவகை மாலைகள் கட்டுதல் (4) திருமஞ்சனம் கொணர்தல் 15 கோவிலில் அலகிட்டு மெழுகுதல் (6) விளக்கெரித்தல் (7) திருமுறை எழுதுதல் (8) திருமுறை வாசித்தல் முதலிய பல திருப்பணிகளில் போதிய பயிற்சி அளித்துத் தொண்டர் ஆக்கி வந்தார் என்பது சேக்கிழார் கூற்று. வரலாறு இந்தியா முழுவதும் பள்ளிகளையும் விஹாரங்களையும் வைத்துச் சமயக் கல்வியைப் புகட்டிவந்த சமண-பெளத்த சமயங்களை ஒழிக்கப் புறப்பட்ட சைவசமயத்தில் அச் சமயவுணர்ச்சியை ஊட்டி வளர்க்கும் தக்க அமைப்புக்கள் இருந்தாகல் வேண்டும். சமண மடத்தில் தலைவராக இருந்து சைவரான அப்பர் இத்தகைய அமைப்புக்களில் வல்லர் அல்லவா? அவர் காலத்தில் சைவசமய வளர்ச்சிக்குரிய மேற்சொன்ன செயல்களில் பயிற்சி தரத்தக்க மடங்கள் இருந்தன என்று நம்பலாம். அவரே திருப்பூந்துருத்தியில் ஒரு மடம் அமைத்தார்; அங்குத் தங்கியிருந்த பொழுதுதான் பல திருப்பதிகங்கள் பாடினார் என்பது சேக்கிழார் கூற்று" எனவே, மேற்சொன்ன கணநாதர் போன்ற நாயன்மார் பயிற்சி அளிக்காவிடின், அப்பர்-சம்பந்தரது பிரச்சாரத்தால் மட்டும் சைவசமயம் தமிழகத்தில் உறுதியாக வேரூன்ற முடியாதன்றோ? சோழர் காலக் கல்வெட்டுக்களில், ஆண்டார் என்பவர் மலர் பறிப்பவர் அலகிடுபவர் மெழுக்கிடுபவர் திருவீதி தூய்மை செய்பவர்" எனவரும் செய்திகளை நோக்க அவர்கள் கணநாதர் போன்றாரிடம் பயிற்சி பெற்றவர் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.