பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பெரியபுராண ஆராய்ச்சி முடிவுரை இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளை நோக்கச் சேக்கிழார், (1) திருமுறைகள் (2 வல்லார்வாய்க் கேட்ட செய்திகள் 3 கல்வெட்டுக்கள் ஆகிய இம்மூன்றின் துணைக்கொண்டே இப்பகுதியிற் குறித்த வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்தார் எனக்கூறல் பொருந்துவதாகும். இங்ங்னம் சேக்கிழார் அரும்பாடுபட்டுக் குறிப்புகள் தொகுத்தமையாற்றான் பெரிய புராணம் வரலாற்றுச் சிறப்புடைய நூலாக மதிக்கப்படுகின்றது. சேக்கிழார் வாதாபிப்போரைக் குறியாதிருப்பின் சம்பந்தர் காலம் அறிந்திருத்தல் இயலாது அங்ங்னமே "குணபர ஈசுவரம்" குறித்திராவிடில் அப்பர் காலம் அறிந்திருத்தல் இயலாது. சேக்கிழார் வரலாற்று உணர்ச்சி உடையவர் என்பதற்கு இவ்விரண்டு சிறந்த வரலாற்றுக் குறிப்புக்களே போதிய சான்றாகும் அன்றோ?