பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பெரியபுராண ஆராய்ச்சி 3. “செய்வதற் கரிய செய்கை செய்தநற் றொண்டர்போகணி” (செ. 28) இயற்பகை முனிவா ஒலம் ஈண்டநீ வருவாய் ஒலம் அயர்ப்பிலா தானே ஒலம் அன்பனே ஒலம் ஒலம் செயற்கருஞ் செய்கை செய்த திரனே ஒலம் என்றான் மயக்கறு மறைஓ லிட்டு மாலயன் தேட நின்றான் (செ. 29) என்ற பெரியபுராணச் இயற்பகையார் செய்யுள் அடிகளின் கருத்தும் செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்ற குறட்பாவின் அடிக்கருத்தும் ஒத்து மிளிர்தல் காண்க 4. யானே இனிஇந் நிரைமேய்ப்பன் என்றார் அஞ்சி இடைமகனும் தானேர் இறைஞ்சி விட்டகன்றான் தாமும் மறையோர் இசைவினால் ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு வானே என்ன நிரைகாக்க வந்தார் தெய்வ மறைச்சிறுவர் என்ற பெரிய புராணப் பாடலின் (சண்டேசுரர்-24) அடிப்பொருண்மையும் விசும்பிற் றுளிவிழின் அல்லால்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது - என்ற குறளின் பொருட் சிறப்பும் ஒத்திருத்தல் இன்பம் பயப்பதாம். 5. தாழுஞ்செய லின்றொரு மன்னவன் தாங்கவேண்டும் கூழும்குடி யும்முத லாயின கொள்கைத் தேனும் சூழும்படை மன்னவன் தோளிணைக் காவ லின்றி வாழுந்தகைத் தன்றிந்த வையகம் என்று சொன்னார் என்ற சேக்கிழார் பெருமான் கருத்தும் மூர்த்தியார் –28) படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு - என்ற வள்ளுவப் பெருந்தகையார் கருத்தும் ஒன்றுபடல் காணத்தக்கது. 6. ஆறு சடைம்ேல் அணிந்தருளும் - அண்ணல் வைத்த படிக்காசால் ஈறி லாத பொருளுடைய - இருவருடைய திருமடங்கள்