பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 185 சோறு நாளுந் தொண்டர்மகிழ்ந் துண்ண உண்ணத் தொலையாதே ஏறு பெருகும் புவிபோற்ற இன்புற் றிருக்கும் அந்நாளில் என்ற பெரிய புராணப் பாடல் கருத்தும் நாவுக்கரசர்-261) தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் என்ற குறட் கருத்தும் அறிஞர்க்கு இன்பம் தரும் ஒப்புமையாம். பட்டினப்பாலை சண்டேசர் புராணத்தில் காவிரியாற்றுச் சிறப்பு, பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யா தளிக்கும் புனல்நாடு' என்று (செ1) சேக்கிழார் பாராட்டியிருத்தலையும், வான்பொய்ப்பினும் தான்.பொய்யா மலைத்தலைய கடற்காவிரி எனவரும் பட்டினப்பாலை அடிகளை (5 & 6 யும் நோக்குக. மதுரைக் காஞ்சி - மானக்கஞ்சாறர் புராணத்தில் ‘கஞ்சாறு என்ற நகரச் சிறப்புக் கூறுகையில் வரும் - புகல் முழவம் கனைசாறு மிடைவீதி என்ற (செ. 6. தொடர்ப் பொருள், மதுரைக் காஞ்சியில் வரும் முழவிமிழும் அகலாங்கண் விழவுநின்ற லியன்மறுகில் என்ற வரி 327-328 வரிப் பொருளுடன் ஒன்றுபடல் காண்க சிலப்பதிகாரம் பெரிய புராணத்துள் சிறப்பாக இசை பற்றிவரும் இடங்கள் அனைத்தும் சிலப்பதிகாரம்-அரங்கேற்று காதை அடிகளுடன், அவற்றுக்கு அடியார்க்கு நல்லார் காட்டும் மேற்கோள் நூற் பகுதிகளுடன் ஒத்துவருதல் வியக்கத் தக்கது. இதனால் இவர் சிலப்பதிகாரத்தை நல்லமுறையிற் படித்தவர் என்பது புலனாகும், இஃதன்றி வேறுபல இடங்களும் உண்டு. அவற்றுள் இரண்டு 岛T6孤5,