பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பெரியபுராண ஆராய்ச்சி 5. திருக்குறிப்புத் தொண்டர் 6. அதிபத்த நாயனார் 7. மானக்கஞ்சாறர் 8. ஏயர்கோன் கலிக்காம நாயனார் அடியார் தந்த ஆடையை மழையால் மாலையில் உணர்த்திக் கொணரக் கூடாமையின் உயிரை மாய்க்க முயன்றவர். சிவனார் அவரைப் பிடித்துக் காப்பாற்றினார். முதல் மீன் சிவனுக்கென விட்டவர் மீனே கிடைக்காமல் ஒரு பொன் மீனே முதலில் கிடைக்க அதையும் சிவனுக்கு விட்டவர். ஏயர்கோன் மாமனார். ஒரே மகள் கூந்தலை அடியவர்க்கு அறுத்துக் கொடுத்தவர். சூலைநோயால் வருந்திச் சுந்தரரைக் காண மறுத்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றவர்; இறுதியில் சுந்தரரால் நோய் நீங்கப் பெற்று இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர். அழுத்தமான சைவப் பற்றுடையவர் - 6 பேர் 1 எறிபத்த நாயனார் 2. சக்தி நாயனார் 3. மூர்க்க நாயனார் 4. சாக்கிய நாயனார் 5. நந்தனார் 6. முனையடுவார் நாயனார் - புகழ்ச் சோழர் யானை மாலையை அறுக்க, அதனைக் கொன்றவர்; பாகர் முதலிய வரையும் கொன்றவர். சிவனடியாரை இகழ்பவரின் நாவை அறுத்தவர் - சூதாடிப் பெற்ற பொருளைச் சிவனடியார்க்கு அமுதளிக்க உதவினார்: சூதாட்டத்தில் தவறான ஆட்டம் ஆடுபவரைக் குத்துபவர். மூர்க்கர். பெளத்தர் - காஞ்சி சென்று பல மதங்களைச் சோதித்துச் சைவராகிக் கல்லால் அர்ச்சித்து முத்தி பெற்றவர். நந்தி விலகச் செய்தவர்; சிதம்பரத்தைத் தரிசித்தவர். போர் செய்து வந்த பணத்தைக் கொண்டு சிவன் அடியார்க்கு உணவு படைத்தவர்.