பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் - அரசர் கால வரையறை 231 3. அடியார்-அரசர் கால வரையறை சிவஸ்கந்தவர்மன்முதல் சிம்மவிஷ்ணு வரை (கி.பி 300 - 615) சோழர் களப்பிரர் இடையீடு - கோச் செங்கட் சோழர் - புகழ்ச் சோழர்தண்டியடிகள் காலத்துச் சோழ அரசன் (பெரிய புராணம்) பாண்டியர் : களப்பிரர் இடையீடு. - கடுங்கோன் (கி.பி. 575-600 - மாறவர்மன் அவனி சூளாமணி (கிபி 600-825) இக்கால நாயன்மார் : (1) கோச் செங்கட் சோழர் 2 புகழ்ச் சோழர் (3) சண்டீசர் (4) கண்ணப்பர் 5 காரைக்கால் அம்மையார் (6) திருமூலர் (7) மூர்த்தி நாயனார் (8) கூற்றுவ நாயனார் (9) ஐயடிகள் காடவர்கோன் 10 கணம் புல்லர் (11) அரிவாள் தாயர் (12 நமிநந்தி அடிகள் (3) தண்டியடிகள் (14. சாக்கிய நாயனார் 15 எறி பத்தர் (16) அமர்நீதி நாயனார் (17) புகழ்த்துணை நாயனார் இக்காலச் செய்திகள் : சங்க காலத்திற்குப் பின் களப்பிரர் தொண்டை - சோழ - பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டனர். பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றி ஆண்டனர். பல்லவர் பல முறை காஞ்சியைக் கைவிட்டுத் தெலுங்கு நாட்டில் உறைந்தனர். கோச் செங்கட் சோழர் 70 மாடக் கோவில்களைக் கட்டியதும் சைவத்தை வளர்த்ததும் இக்காலத்தில்தான் என்று கூறலாம். ஏறக்குறையக் கிபி 575 இல் சிம்ம விஷ்ணு சோழரையும் களப்பிரரையும் வென்று காவிரியாறு வரை பல்லவப் பெருநாட்டை ஏற்படுத்தினார்; அதே சமயத்தில் கடுங்கோன் என்னும் பாண்டியன் பாண்டிய நாட்டைக் களப்பிரரிடமிருந்து மீட்டான். இவனுக்கு முற்பட்ட குழப்ப காலத்திற்றான் மூர்த்தி நாயனார் மதுரையை ஆண்டார் என்று பெரிய புராணம் கூறுகிறது. மகேந்திரவர்மன் 1 (கி.பி. 615 - 630) சோழன் - மங்கையர்க்கரசியார் தந்தை (பெரிய புராணம்) பாண்டியர் - மாறவர்மன் அவனி சூளாமணி - சேந்தவர்மன் (கி.பி. 625-640) இக்கால நாயனார் - அப்பர் இக்காலச் செய்திகள்-அப்பர் சமணத்திலிருந்து சைவரானார் அரசனும் சைவனானான். பல குகைக் கோவில்களை அமைத்தான் சைவம் நன்கு பரவத் தொடங்கியது.