பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலம் 45 அழைத்தமையாலும், அவரது காலம் ஏறத்தாழக் கி.பி. 580-660 எனக்கொள்ளலாம். இக்கால எல்லைக்குள், (1) மகேந்திரன் ஆட்சி (கி.பி. 615630), (2) நரசிம்மன் ஆட்சியின் பெரும்பகுதி (கி.பி 630-668), 3) வாதாபி படையெடுப்பு (கி.பி. 642), (4) நெடுமாறன் ஆட்சிக் காலத்தின் முற்பகுதி (கி.பி. 640-680) என்பன அடங்கி விடுகின்றன. வாதாபிப் போருக்குப் பிறகு சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியிற் குடியேறிச் சிவத் தொண்டில் ஈடுபட்டவர். சம்பந்தர் வயது . 16 என்ற கர்ணபரம்பரைக் கூற்றை நம்பினால், சிறுத்தொண்டரைச் சம்பந்தர் சந்திக்கையில் ஏறத்தாழ 10 வயதுடையவராகலாம். அதன் பிறகே சம்பந்தர் மதுரை சென்று நெடுமாறனைச் சைவனாக்கி மீண்டார். ஆகவே உத்தேசமாகச் சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்த காலம் கி.பி. 650 எனக் கொள்ளலாம். கொள்ளின், சம்பந்தர் பிறப்பு ஏறத்தாழக் கி.பி. 640 எனவும், முக்தியடைந்த ஆண்டு ஏறத்தாழக் கி.பி. 656 என்றும் ஆகும். ஆகவே, சம்பந்தர் காலமும் (கி.பி. 640-656)" முற்சொன்ன அப்பர் காலத்துள் அடங்குதல் காண்க இராச சிங்கன் (கி.பி. 685-720 காலத்தவர் சுந்தரர் எனக் கொள்ளின், அப்பர் இறுதிக் காலத்திற்கும் (கி.பி. 660 சுந்தர் காலத்திற்கும் (கி.பி. 685-720) இடையில் ஏறக்குறைய 25 அல்லது 30 ஆண்டுகளே என்னலாம். இது மிகக் குறுகிய இடைக்காலம் என்பது அறியப்படும். சுந்தரர் காலத்தில் பெளத்த சமண வாதங்கள் நாட்டில் இல்லை. ஏறத்தாழச் சமய உலகில் அமைதியும் சைவசமய வளர்ச்சியும் இருந்தகாலம் அவரது காலம் என்பது அவர்டாக்களால் அறியலாம். இத்தகைய நிலைமை அப்பருக்குப் பின் 30ஆண்டுகட்குள் உண்டாகி விட்டதென்று எண்ணுதல் இயற்கை நடைமுறைக்கு மாறுபட்டதாகும். 5. இராச சிங்கனே கச்சியில் முதன் முதல் கற்றளி எடுத்த பல்லவன். அவன் அசரீரி கேட்டான் என்று கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு அவனைப் பாராட்டுகின்றது. அதனையே சேக்கிழார் பூசலார் புராணத்திற் குறிப்பிட்டனராகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்" அஃது உண்மையாயின், இராச சிங்கன் பூசலார் காலத்தவன் ஆகின்றான். அக்காலத்திலே சுந்தரரும் இருந்தனர் எனின் மனக்கோவில் கட்டிய இப்பெரியவரைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பாரன்றோ? இராச சிங்கனைப் புகழ்ந்த சுந்தரர், அவனோடு தொடர்புகொண்ட அல்லது அவன் காலத்து வாழ்ந்த வியத்தகு அடியாரான பூசலாரை விதந்து பாடாமைக்குக் காரணம் என்ன? மேலும், இராசசிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவிற்கு எதிரில் மிக அண்மையில் இருப்பது அநேகதங்காவதம்' என்ற சிவன் கோயில். சுந்தரர் அதனைப்பாடியுள்ளார்; ஆயின், அதற்கடுத்துள்ள கயிலாசநாதர் கோவிலைப் பாடியதாகத் தெரியவில்லை. சுந்தரர் இராசசிங்கனைக் கழற்சிங்கன் என்று பாராட்டியிருப்பாராயின், அவன் கட்டியவியத்தகு கோவிலைப் பாடாமல் இருந்திருப்பாரோ? இது நன்கு கவனிக்கத் தக்க செய்தியாகும்.