பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெரியபுராண ஆராய்ச்சி முடிவுரை இங்ங்னம் பலவகையாக ஆராய்ந்து காணின், ( சுந்தரரும் சேக்கிழாரும் சுழற்சிங்கனைப் பற்றிக் கூறிய ಅರಿಟL567 அனைத்திற்கும் நந்திவர்மனைப் பற்றிய குறிப்புகள் பொருத்தமாகக் காணப்படுகின்றன. (2) மலையாளக் கூற்றுக் குறிக்கும் காலமும் (கி.பி. 825 தொண்டைமான் யானைபற்றிய செய்தி நிகழ்ந்த காலமும் ஏறத்தாழ நந்திவர்மன் காலத்திற்கு ஒத்து வருகின்றன. (3) சுந்தரர் இராச சிங்கன் காலத்தவராகக் கொள்ளற்கு அப்பர்க்கும், இராசசிங்கற்கும் உள்ள குறுகியகால இடையீடும், சுந்தரர் கயிலாசநாதர் கோவிலைப் பாடாமையும் தடைகளாகக் கருதப்படலாம். இவை அனைத்தையும் நோக்க, 'இராச சிங்கனே கழற்சிங்கன் என்ற முடிவுக்குரிய தக்க சான்றுகள் கிடைக்கும்வரை, சுந்தரர் குறித்த கழற்சிங்கனே மூன்றாம் நந்திவர்மன் எனக் கொள்ளலாம்"