பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெரியபுராண ஆராய்ச்சி திருமாளிகைத் தேவர் திருமாளிகைத் தேவர் என்ற ஜயந்தன் சேந்தனார் இராசராசன் காலத்தில் திருவிழிமிலைக் கோவிலில் விளக்குவைத்தார் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. சேந்தனார் திருவிழிமிழலை, திருஆவடுதுறை, திருவிடைக்கழி, தில்லை என்ற நான்கு தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார். திருமாளிகைத் தேவர் தில்லை ஒன்றைப் பற்றியே நான்கு பாக்கள் பாடியுள்ளார். பின்னவரது நான்காம் பாவில் அவரது பெயர் இல்லை. சேந்தனார் பாட்டின் இறுதியில் சேந்தன்' என்ற பெயர் இருக்கிறது. கருவூர்த் தேவர் போன்ற பிறருடைய பாக்களில் எல்லாம் அவர்கள் பெயர்கள் ஈற்றில் அமைந்துள்ளன. இவற்றை நன்கு நோக்கத் திருமாளிகைத் தேவர் என்றவரும் சேந்தனார் என்றவரும் கல்வெட்டிற் கண்டவாறு ஒருவராகவே இருத்தல் கூடியதே என்று எண்ண இடமுண்டாகிறது. இக்கருத்தை அறிஞரும்’ ஆதரித்தல் காண்க. இது பொருந்துமாயின், கல்வெட்டிற் கண்ட அறிஞரே திருவிசைப்பாவில் 8 பாக்களைப் பாடியவராகக் கருதலாம். அவர் இராசராசன் காலத்தவர் ஆவர். கருவூர்த்தேவர் இவர் இராசராசன் தஞ்சையிற் கட்டிய பெரிய கோவில்மீது பாட்டுப் பாடியுள்ளார். அதன் பிறகு இராசேந்திரன் புதிதாக உண்டாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் எடுப்பித்த கங்கைகொண்ட ச்ோழிச்சரத்தின் மீதும் பாடியுள்ளார். எனவே, இவர் இராசராசன்- இராசேந்திரன் கால்த்தவராவர். நம்பி திருமுறைகள் வகுத்துப்பின் திருத்தொண்டர் திருவாந்தாதி பாடி முடித்தமை இராசராசன் காலத்தில் என்பது திருமுறைகண்ட புராணக் கூற்றாகும்." அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, இராசராசனுக்குப் பிறகு, இராசேந்திரன் தன் வடநாட்டு வெற்றிக்குப் பிறகு கங்கைகொண்ட சோழிச்சரம் அமைத்தான். அதன் பிறகே அதன்மீது கருவூர்த்தேவர் பதிகம் பாடினார். எனவே, நம்பி திருமுறைகள் தொகுத்துச் சில ஆண்டுகள் கழிந்த பின்னரே இப்பாடல் பாடப்பட்டது என்பது தெளிவுறப் புலனாகிறதன்றோ? புலனாகவே, நம்பி இராசராசன் காலத்திற்றானே இப்பாடலைத் திருமுறையில் சேர்த்திருத்தல் இயலாததன்றோ?' பூந்துருத்தி - நம்பி காட நம்பி முதலாம் இராசாதிராசனது 32-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1050) வெட்டப்பட்ட திருவையாற்றுக் கல்வெட்டு ஒன்றில், ஆத்ரேய கோத்திரத்து நம்பி காடநம்பி என்ற அர்ச்சகர் பெயர் காண்கிறது. இவரைக்குறிக்கும் கல்வெட்டுத் திருப்பூந்துருத்தியை அடுத்த திருவையாற்றிற் காணப்படலால், இவரே திருவிசைப்பா ஆசிரியராகலாம் என்று நினைக்க இடமுண்டு.” அங்ங்னம் கொள்ளின், இவரது காலம் நம்பிக்கு மிகவும் ஏறத்தாழ 40 ஆண்டுகள் பிற்பட்டதாகலாம். இவர் சுந்தரரும் சேரமானும் வெள்ளானை