பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைத் தொகுப்பு 55 மீது மனிதவுடம்புடன் சென்றனர் என்று பாடியுள்ளார். ஆயின் நம்பி, சுந்தரர் வெள்ளை யானைமீதும் சேரமான் குதிரைமீதும் சென்றதாக 3 இடங்களிற் பாடியுள்ளார். இப் பிற்கூறப்பட்டதே தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச்சுவரில் ஒவியமாகக் காண்கிறது” ஆயின் முன் சொன்னது இரண்டாம் இராசராசன் கட்டிய தாராசுரத்துக் கோவில்" கருவறையின் புறச்சுவரில் சிற்பமாகக் காண்கிறது. இது வேறு எந்த நூலுள்ளும் கூறப்படவும் இல்லை. இதனால் இக்காடநம்பி இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-173 காலத்தவர் அல்லது பிற்பட்டவர் ஆகலாம். இங்ங்னம் கொள்ளின் இவர் சேக்கிழார்க்கும் பிற்பட்டவர் ஆவர். கண்டராதித்தர் இவர் முதற் பராந்தக சோழனது மகனார் ஆவர். கோவில் திருப்பணிகளிற் சிறந்த செம்பியன் மாதேவியார்க்கு மனமொத்த கணவர். இவர் ஆட்சிக் காலம் கி.பி. 949-957.” வேணாட்டு அடிகள் வேணாடு (வேள்நாடு என்பது தென் திருவாங்கூர்ச் சீமை, அதனை ஆண்ட அரசர் சிலர் வேணாட்டு அடிகள் எனக் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிற்றாம் முதன் முறை குறிக்கப்படுகின்றனர்” எனவே, நம் சைவப் புலவராகிய வேணாட்டடிகள் அவருள் ஒருவராக இருக்கலாம் என்று நினைத்தல் தவறாகாது. இது கோடற்பாலதாயின், இவர் நம்பிக்குப் பல ஆண்டுகள் பிற்பட்டவர். திருவாலி அமுதனார் இவர் காலம் அறியக்கூடவில்லை. புருடோத்தம நம்பி இவர் காலமும் தெரிய வழியில்லை. சேதிராயர் சேதிராயர்' என்போர் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்து வடமேற்குப் பகுதியை ஆண்டவர். இவர்தம் தலை நகரம் கிளியூர் என்பது இவர்கள் 'மலையமான்கள் எனவும் பட்டனர். இவர்கள் முதற் குலோத்துங்கன் காலமுதலே சேதிராயர்' என்ற புதிய பட்டத்துடன் கல்வெட்டுக்களிற் காண்கின்றனர். குறுநிலமன்னர் பலர் தத்தம் மரபுக்குப் புராண மரபைக் கொள்ள முயன்றபொழுது இம் மலையமான்கள் தங்களைச் சேதிநாட்டு 'ஹெய்ஹயர் மரபினர் என்று கூற விரும்பிச் சேதிராயர்' என்று கூறிக் கொள்ள முனைந்தனர். இச்சேதிராயர் என்ற மலையமான்கள் சேதிராயர்’ என்ற பட்டத்துடன் குலோத்துங்கற்கு முற்பட்ட கல்வெட்டுக்களிற்