பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலத்துச் சைவ சமய நிலைம்ை 85 முடிவுரை இதுகாறும் கூறப்பெற்ற பலதுறைச் செய்திகளைக் கொண்டு நாம் இங்கு அறியத்தக்கன இவையாகும். 1. சிறப்பாக அப்பர் காலமுதல் பல்லவர் ஆட்சியில் பாடல் பெற்ற கோவில்கள் படிப்படியாகச் சிறப்புப் பெற்று வந்தன. பல புதிய கோவில்களும் ஏற்பட்டுச் சிறப்படைந்தன. சைவ சமயம் வளர்ச்சி பெற்று வந்தது. திருப்பதிகங்கள் ஒரளவு அங்கங்கு ஒதப்பெற்று வந்தன.” சில கோவில்களை அடுத்து மடங்கள் இருந்து தொண்டாற்றி வந்தன. நாயன்மார்க்குச் சில கோவில்களிலேனும் வழிபாடு நடைபெற்று வந்திருக்கலாம். - அந்நாயன்மார் வரலாறுகளை ஒரளவேனும் மக்கள் அறிந்து இருந்தனர். - நாயன்மார் பெயர்கள் பல்லவர் கால மக்கட் பெயர்களோடு ஒன்றுபட்டனவே நாயன்மார்க்குக் காலத்தாற் பிற்பட்ட மக்கள் அவர்தம் பெயர்களைத் தாங்கி இருந்ததற்கு அந்நாயன்மார்பால் கொண்ட பக்தி காரணமாகலாம். -