பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பெரியபுராண ஆராய்ச்சி கொண்டன. பல மடங்கள் காலாமுகர் ஆட்சியில் இருந்தன. அவற்றுள் கொடும்பாளுர், வெடால், மேல்பாடி, திருவொற்றியூர், திருச்சேயலூர் முதலிய இடங்களில் இருந்த மடங்கள் குறிக்கத் தக்கவை." சிவயோகியாரை உண்பித்த கோவில்கள் சிவயோகியர் என்பவர் உலகப்பற்றை விட்ட துறவிகள். அவர்கள் சிவனைச் சிந்தித்தபடியே இருப்பவர் இறக்குந் தறுவாயில் உடம்பைச் சாம்பரில் நனைத்து உடம்பு முழுவதும் வெண்ணிறு பூசி சிவ மந்திரங்களைச் செல்லிக் கொண்டே தங்கள் மார்பில் உள்ள இலிங்கத்தைப் பூசிப்பவர். இவர்களை உண்பித்த கோவில்கள் பல என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கிறது. அவற்றுள் குறிக்கத்தக்கன பின்வரும் தலங்களைக் சேர்ந்தவை; திரு எறும்பியூர், திரு ஆவடுதுறை குடந்தைக் கீழ்க் கோட்டம், திருநெடுங்களம், திருக்கற்குடி, திருத்துருத்தி, திருமழபாடி, திருமணஞ்சேரி, திருவாரூர், திருக்கடவூர், திருவாட்போக்கி, திருநறையூர் திருப்பூந்துருத்தி தஞ்சாவூர் என்பன." - - மாவிரதியரை உண்பித்த கோவில்கள் காலாமுகச் சைவருள் கடுநோன்பினர் மாவிரதியர் எனப்பட்டனர் போலும் காலாமுகர் மண்டை ஒட்டில் உண்பவர்; பினச் சாம்பரை உடல் முழுவதும் பூசுபவர் அப்பினச் சாம்பரை உண்பவர்; தண்டேந்தி இருப்பவர்; மதுப் பாத்திரம் ஏந்தி இருப்பவர்; அம்மதுவில் இறைவன் இருப்பதாக எண்ணி வழிபடுபவர்; நரபலி இடுபவர். தென் ஆர்க்காட்டுக்கோட்டம் ஜம்பையில் உன்ன சிவன் கோவில் ஆட்சியில் மாவிரதியர் லகுலீசுவர பண்டிதர் பங்கு கொண்டவராக இருந்தார்." திருவொற்றியூர்க் கோவிலில் நாளும் மாவிரதியர் இருவரை உண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது." தவசியரை உண்பித்த கோவில்கள் தவசியர் எனப்பட்டேர் சிறந்த சிவனடியார்; துறவு பூண்ட நன்மக்கள். இவர்களை உண்பித்த கோவில்களில் குறிக்கத்தக்கன-திருமழபாடி, திருமணஞ்சேரி, திருஆவடுதுறை, திருவாட்போக்கி, திருக்காளத்தி, திருப்பூந்துருத்தி என்ற தலத்துத் கோவில்களே ஆகும்." மாகேசுவரரை உண்பித்த தலங்கள் இவர்கள் கோவில் ஆட்சியிற் பங்குகொண்டு இருந்தனர். மாகேசுவரரை உண்பித்த தலங்களில் குறிப்பிடத் தக்கவை-திரு ஆவடுதுறை, திருக்கடவூர், திருவொற்றியூர், திருக்காளத்தி, தில்லை முதலியன." . . அபூர்விகளை உண்பித்த தலங்கள் அபூர்விகள் என்பவர் அத்தியயனப் பிராமணர் இவர்கள் வேதங்களை