பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை 95 ஒப்புவிப்பதில் வல்லவர்; பல தளிகளைத் தரிசிப்பவர். இவர்களை உண்பித்த தலங்களிற் சிறந்தவை - குடந்தைக் கீழ்க்கோட்டம், திரு ஆவடுதுறை பாபட்லா, மாறன்பாடி முதலியன." ஆண்டார்களை உண்பித்த தலங்கள் இவர்கள் கோவிலில் இருந்த திருக்கைக்கோட்டி மண்டபத்தைத் தூய்மை செய்பவர்; திருமுறை ஒதுபவர்; திருநந்தவனம் அமைப்பவர்; மலர் பறிப்பவர்; அன்பர்க்கு அடியவர்; மடத்தில் நிஷ்காமிகளாக இருப்பவர்.” இவர்கள் திருவீதிப்பணிசெய்தலும் உண்டு." இவர்களை உண்பித்த கோவில்களிற் குறிக்கத்கக்கவை திருவல்லம், திருஒத்துர், திருஆவடுதுறை என்ற தலத்துத் கோவில்களாகும்." நாயன்மார் பூசிக்கப்பெற்ற கோவில்கள் நாயன்மார் திருமேனிகள் அப்பர், சம்பந்தர் காலம்முதலே எடுப்பித்தல் மரபாக இருந்திருத்தல் வேண்டும் என்பதும், சிறப்பாகச் சுந்தரர் காலத்தில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் அவை வைக்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்பதும், இன்றேல் அங்குச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையை இவ்வளவு தெளிவாக ஒவ்வொருவரையும் சுட்டிப் பாடியிருத்தல் முடியாது என்பதும் சென்ற பகுதியிலே நன்கு விளக்கபட்டவை." இங்ங்ணம் கோவில்களில் நாயன்மார் திருமேனிகள் எடுப்பித்தல் சோழர் காலத்தில் மிகுதிப்படலாயிற்று. 1. இராசராசற்கு முன்பே திருவதிகை வீரட்டானத்துள் வாகீசுவரம் என்ற பெயரால் திருநாவுக்கரசர்க்குக் கோவில் இருந்தது." - 2. குஹ9ர்க் கோவிலில் நம்பிஆருரர்க்குக் கோவில் இருந்தது. சித்திரை திருவிழா நடந்தது." 3. செங்காட்டங்குடியில் சிறுத்தொண்ட நம்பி விழா நடைபெற்றது." 4. இராசராசன் காலத்தில் திருப்புகலூரில் திருநாவுக்கரைய தேவர்க்குப் பூசை முதலியவை புதியனவாக உண்டாகப்பட்டன." 5. தஞ்சைப் பெரியகோவிலில் சண்டீசர்க்குத் தனிக்கோவில் ஏற்பட்டது. பூசை சிறப்பாக நடைபெற்றது." 6. சண்டீசர் சிவலிங்க பூசை செய்தல் - தந்தை கால் வெட்டுண்டு கீழே விழல்- சிவபிரான் உமையோடு காட்சிதரல் - சண்டீசர்க்குச் சண்டிசப்பதம் தரல் இவற்றை விளக்கும் திருமேனிகள் தஞ்சைப் பெரிய கோவிலில் எடுப்பிக்கப்பெற்றன. " 1