பக்கம்:பொங்கற்பரிசு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவரின் தோளில், உளத்தினிற் பொங்கல் !

ஊர்ப்பொது மன்றினில் காளை
முழக்கொலி கேட்டு வந்தது கூட்டம் !
வெற்றியின் நீள்முர சார்க்கும்!
இழந்ததை நாமே அடைந்தனம்: வாழ்க !
இன்றலோ நம்மரும் பொங்கல்!
கிழவரும் காளை ஆகினர்; பாட்டிச்
சிரிப்பொலி தேன்சுவை யாமே! 4


நிறைந்ததுவே இன்பம்!

பொன்மலர், பொற்றா மரைமலர், நம்வாழ்வின்

நன்மலர் பூத்தது; வெற்றி நமதாம்!
விரிந்த மலர்க்காடு நீர்நிலை மேடும்
பரந்ததுகாண் தங்கப் பரிதி! குளிரோ
விறைந்தது மெல்லப் புறங்காட்டி! வாழ்வில் 5
நிறைந்ததுவாம் இன்பம்! நெடுநாள் பகையோ
குறைந்தது; யாவும் குறைந்தது; வாழ்க !
குளிர்புனல் ஓடை கொடிபுதற் தோப்பு
வளர்ந்தது செங்கதிர்; வாழிய! வாழிய!
வையமெலாம் ‘பொங்கலோ பொங்கல்’ தமிழிசைத்தேன் 10
மெய்யில் உயிரில் புகுந்து மிகுந்து
விரிந்தது; வாழ்க நிலைத்து ! 12

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/60&oldid=1148177" இலிருந்து மீள்விக்கப்பட்டது