பக்கம்:பொன் விலங்கு.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 503.

"இடையூறுகளையும்-தடைகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை குமரப்பன்! அவைதான் என்னுடைய தைரியத்தையும் சிந்தனையையும் வளர்க்கின்றன. பிரச்சினைகள் சூழ்ந்து நின்று உறுத்தும்போதுதான் நான் பலசாலியாயிருக்கிறேன். ஆனால் என்னை நினைத்து எனக்காகத் தவித்து என்னை அடையவும் முடியாமல் அடைய வேண்டும் என்ற ஆசையை விடவும் முடியாமல் இன்னொருவர் வேதனைப்படுவதைத்தான் நான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..."

'இன்னொருவருடைய தூய்மையான அன்பு என்பது வாழ்க்கையில் மனிதன் அடைகிற விலைமதிப்பற்ற பண்டங்களில் ஒன்று. எந்த விலைமதிப்பற்ற பண்டத்தையும் கவலையோ பாதுகாப்போ இல்லாமல் அடையமுடியாது என்பது வாழ்க்கைத் தத்துவம்' -

'உண்மைதான்? நம்முடைய ஒவ்வொரு விருப்பமும்அப்படி விருப்பமாகப் பிறக்கும்போதே-கவலையோடும்ஏமாற்றத்தோடும் சேர்ந்துதான் பிறக்கின்றது."-தங்களுக்குள் இப்படி நீண்ட நேரம் வரை பேசிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்.

அடுத்த நாள் காலை கல்லூரி வகுப்புகள் வழக்கம் போல் தொடங்கிவிட்டன. மாணவர்களின் அன்பையும் ஆர்வத்தையும் கண்டு சில நாழிகை நேரம் அவன் தன் கவலைகள் மறக்க முடிந்தது. மறுதினம் காலையில்-பூபதியின் மகள் பாரதியும், ஜமீன்தாரும், கண்ணாயிரமும் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். - 'இன்று காலையில் அவர்கள் வந்ததும் வராததுமாக நாம் போய் நிற்க வேண்டாம். வர்த்தகப் பிரமுகர்களும், நண்பர்களுமாகத் துக்கம் விசாரிக்கிற கூட்டம் இன்னும் இரண்டு நாளைக்கு அங்கே நிறைந்திருக்கும். எனவே, நாம் நாளை அல்லது நாளன்றைக்குப் போய் அந்தப் பெண்ணிடம் ஒரு மரியாதைக்காகத் துக்கம் விசாரித்துவிட்டு வரலாம்' என்று கல்லூரி முதல்வர் ஆசிரியர்களிடம் எல்லாம் கூறியிருந்தார். பூபதியின் மகளைத் துக்கம் விசாரிக்கப் போகிற வேளையில் அதே வீட்டில் மஞ்சள் பட்டியாரையும், கண்ணாயிரத்தையும் சந்திக்க நேரிடுமோ என்று கூசித் தயங்கிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/505&oldid=595758" இலிருந்து மீள்விக்கப்பட்டது