பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. 'சொல்லின் செல்வன் சொல்லாமல் சொன்னவை' இருவரின் ஒருவகை உரையாடல் வருமாறு. இன்றைக்கு என்ன சமையல்? ஒரு பச்சடி - என்ன பச்சடி? தேங்காய்ப் பச்சடி. ஓர் ஊறுகாய் - என்ன ஊறுகாய்? எலுமிச்சை. ஒரு துவையல் - என்ன துவையல்? புதினாத் துவையல். ஒரு பொரியல் - என்ன பொரியல்? கேரட் பொரியல். ஒரு வறுவல் - என்ன வறுவல்? வாழைக்காய். ஒரு சிப்சுஎன்ன சிப்சு? உருளைக்கிழங்கு. ஒரு கீரை என்ன கீரை ? சிறுகீரை. ஒரு கூட்டு - என்ன கூட்டு? கோசுக் கூட்டு. ஒரு சாம்பார்-என்ன சாம்பார்? வெண்டைக்காய். ஓர் இனிப்பு. என்ன இனிப்பு? இலட்டு. ஒரு பாயசம் - என்ன பாயசம்? சேமியாப் பாயசம். - இவ்வாறு உரையாடல் நீண்டு கொண்டிருக்கிறது. என்ன-என்ன-என்று கேட்கக் கேட்கச் சொல்லாமல், என்ன சமையல் என்ற ஒரு கேள்விக்கே தொடர்ந்து இவ்வளவு பதில்களையும் கூறியிருப்பின், சொல்செட்டு உண்டாக, காலமும் முயற்சியும் மிச்சப்பட்டிருக்கும். இதுபோலவே, பெரியவர் ஒருவர் தம்மிடம் புதிதாய் வந்த ஒருவரை நோக்கி, நீ யார்’ என்று கேட்டதும், என் பெயர் இன்னது; என் பெற்றோர் இன்னார்; யான் இன் னாரிடம் வேலை பார்க்கிறேன்; இப்போது இன்ன நோக்கத்துடன் இங்கே வந்துள்ளேன் - என்று வந்தவர் கூறின் சொல் செட்டாகும். மற்றும், பல கேள்விகள்