உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மக்கள்குழு ஒப்பந்தம் கேட்ட பின்னர்ச் சொல்ல வேண்டிய பதில்களை நீ யார்’ என்ற ஒரு கேள்வி கேட்டதும் சொல்லிவிடின், இது சொல் செட்டோடு - சொல் திறமையுமாகும். இந்தத் திறமை அனுமனிடம் காணப்பட்டது. முதல் முதலாக, இராம-இலக்குமணரைக் காணவந்த அனுமனை நோக்கி நீ யார்' என இராமன் வினவியதும், “என் பெயர் அனுமன்; தந்தை-காற்றின் வேந்தன் (வாயு பகவான்); தாய் அஞ்சனை; சுக்கிரீவனிடம் யான் ஏவல் செய்கிறேன்; அவர் அனுப்ப யான் உங்களைக் கண்டு பேச வந்துள்ளேன்” - என்று அனுமன் விடையிறுத்தான். இதனைக் கிட்கிந்தா காண்டம் அனுமப் படலத்திலுள்ள பின்வரும் பாடல்களால் அறியலாம். (கம்பராமாயணம்) ' மஞ்செனத் திரண்ட கோல மேனிய மகளிர்க் கெல்லாம் நஞ்செனத் தகைய வாகி நளிர் இரும்பனிக்குத் தேம்பாக் கஞ்சம் ஒத்துதலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் '. " இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன் செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ நும்வரவு நோக்கி விம்மலுற்று அனையான் ஏவ, வினவிய வந்தேன் என்றான் - எம்மலைக் குலமும்தாழ இசை சுமந்து எழுந்த தோளான்”.