பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 119 அருட்பா பரவப் பல்வேறு பணிகள் ஆற்றியதாலும், தாமும் அருட்பாக்கள் பல இயற்றி வெளியிட்டதாலும், புதுவைத் தமிழ்ச் சங்கம் இப்பெரியாருக்கு அருட்பா வாணர் என்னும் அரிய பெரிய பட்டத்தை வழங்கிப் பெருமை பெற்றது. அன்று முதல் இவர், “அருட்பா வாணர்' என்றும் புதுச்சேரியில் பெயர் வழங்கப் பெறுகிறார். புகழ் வாழ்வு: 1974 மார்ச்சு திங்களில் இராசமாணிக்கனார் புலால் உடலால் மறையினும், புகழ் உடலால் இன்றும் வாழ்பவராகி யுள்ளார்; இனியும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அருட்பா வாணரின் அடிமலர்கட்கு வணக்கம்.