பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பழந்தமிழர் பண்பாடு பழம் (பழைமை) என்பதற்கும் பண்பாடு' என்ப தற்கும் நடுவே நீண்ட-பெரிய இடைவெளி யிருப்பதாகத் தோன்றலாம், ஆம்! பழங்காலத்து மக்கள் நாகரிகம் அற்ற-பண்பாடு அற்ற காட்டு மிறாண்டிகளாக அல்லவா இருந்திருப்பார்கள்? அவர்களிடம் பண்பாடு எப்படி இருந் திருக்க முடியும்? என்று சிலர் வினவுவதாகக் காதுக்குக் கேட்பது போல் தோன்றுகிறது. பழங்காலத்தில் பல்வேறு மக்கட்பிரிவினர் பண்பாடற்று வாழ்ந்ததல்லாமல், இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும் சில இடங்களில் பண்பாடற்ற மக்கட்பிரிவினர் வாழ்ந்து வருவதால் பழந் தமிழர் பண்பாடு' என்பதற்கு இடம் ஏது என்று சிலர் எண்ணக்கூடும். தமிழர் என்றென்ன..! எந்த இனத்தவரும், முதல் முத லாக மக்களினம் தோன்றிய மிகப் பழங்காலத்தில் இப் போது உள்ளது போன்ற நாகரிகமும் பண்பாடும் இல்லாதகல்வியும் இல்லாத காட்டு மிறாண்டிகளாகத்தான் வாழ்ந் திருந்தார்கள், பிறந்த குழந்தைகள் பெரியவர்களைப் போல இருக்க முடியுமா? நாளடைவில், மக்களினத்தில் சில பிரிவினர் ஏனைய பிரிவினரினும் திருத்த முற்றுப் பண்பா டுடைமையில் முந்திக் கொண்டனர். பெரியவர்களுள்ளும் பண்பாடற்றவர் பலர் இருக்க, சிலர் சிறந்த பண்பாள ராகத் திகழ்கின்றனர், அல்லவா? இவ்வாறே, பண்பாடுடை மையில் பல்வேறு பிரிவினரினும் தமிழர்கள் முந்திக் கொண் டனர். அதிலும் மிகப் பழங்காலத்திலேயே முந்திக் கொண்ட