உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் 61 ஆதியிலே அமைந்த சக்தி எங்கள் முத்து மாரி-அம்மா ஆள்கிருளாம் பூமியெல்லாம் சிங்கத்தின்மேல் ஏறி என்று தொடங்குகிறது இந்த நாடோடிப் பாடல். அவள் இருக் கும் ஊர்கள் பலவற்றை இப் பாடலில் காணலாம். சமயபுரம், கன்னபுரம், புன்னே கல்லூர், நார்த்தாமலே, வீராம்பட்டணம், தாரா புரம், குப்பம், தில்லை நகர், நாச்சியார் கோவில், ஒழுகமங்கலம், கணியாக் குறிச்சி, நாகப்பட்டணம், கீரந்தகுடி ஆகிய ஊர்களில் மாரியம்மன் சிறப்பாக வழிபடப் பெறுவதை இதல்ை தெரிந்து கொள்கிருேம். - o ஆதிமக மாயிஅவள் இல்லாத இடம் உண்டா.இந்தப் பூமி என்ன ரெண்டா? அனுதினமும் துதிக்காதவர் தலைஇரும்புத் துண்டா? என்று இந்த முத்துமாரி தாசன் கேட்பதில் அவனுடைய பக்தியின் மிகுதி புலகிைறது. . அடுத்தபடி மற்ருெரு மாரியம்மன் பாட்டு வருகிறது. கண் கண்ட தெய்வம் மாரியம்மன்; தாங்க முடியாத அம்மை பூட்டு வாள்; அது நீங்க வேப்பிலே விபூதி எல்லாம் தருவாள்; ஆயிரங் கண் மாரி இல்லாத இடம் இல்லை; அவளே வழிபடுகிறவர்கள் காவடி கட்டி வழிபடுவார்கள்: திச்சட்டி எடுப்பார்கள்-என்ற செய்திகள் இதில் உள்ளன. - பூசாரி பாட்டுப் பின்பு இருக்கிறது. பூசாரி ஒம் என்றும் ஆம் என்றும் உச்சரிக்கிருன். மயான ருத்ரி முதலிய பல தெய்வங்களே அழைக்கிருன். - பின்பு வரும் கரகப் பாட்டில் ஒன்று முதல் பத்துக் கரகங்களைச் சொல்லும் கண்ணிகள் உள்ளன. - பத்துஞ்சொல்லி முடிந்ததடி கன்னி-ஓகோ என்தாயே பத்தினிஉன் வாசலிலே இப்போ என்று இந்தப் பாட்டு முடிவு பெறுகிறது. இதன் பின் ஆதாம் ஏவாள் கதையையும் ஏசு சரிதையையும் சொல்லும் கும்மிகள் இருக்கின்றன. o 1. L. 311: 1. 2. L. 313; 19. 3. ப. 318:11,