பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

நேராமல், மரண வஸ்த்தை அவரை அண்டாமல், 21.7.1889 அன்றிரவு பதினோரு மணிக்கு வேதநாயகர் மரணமானார்:

மாயூரம் முன்சிஃப் வேதநாயகம் பிள்ளை மாண்டார் என்பதைக் கேட்ட அப்பகுதி மக்கள் பெருங் கூட்டமாய் கூடி தங்களது கண்ணீரைச் சிந்தினார்கள்.

கற்றோர்எல்லாம் கல்விக்களஞ்சியம் மறைந்துவிட்டதே என்று கலங்கினார்கள். பாவலர்கள் எல்லாம் பாவாணர் போய் விட்டாரே என்று பதறினார்கள். ஆவிபிரிந்தது போல தமிழ் அறிஞர்கள் ஆழாத்துயரில் மிதந்தார்கள். வாழ்வை இழந்து விட்டோமே என்று வறியவர்கள் வாயிலடித்துக் கொண்டு அழுதார்கள்! நீதியின் நாயகம் செத்துவிட்டதே என்று நீதி பெற்றவர்கள் புலம்பினார்கள் தமிழ்போயிற்றே, என்று தமிழ்நாடே கலங்கிவிட்டது; ஒழுக்க சீலர் ஆவி ஓய்ந்து விட்டதே என்று பொதுமக்கள் துடித்து மயானம்வரை சென்று கண்ணிரில் மிதந்தார்கள்.

வையகத்திலே வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ்ப் புலமை, பொது வாழ்க்கைக்கு ஒரு வேதநாயகமாய் விளங்கிய ஒழுக்கம், நீதி, நேர்மை, தியாகம் கொண்ட வேதநாயகம் மறைந்தார்.

தமிழ் மொழி வளர்ச்சி கருதி அவர் எழுதிய நூல்களும், சமுக சீர்த்திருத்தத்திலே இவர் செய்த தீவிரத் தொண்டுகளும், கவிதை உலகுக்கு இவர் எழுதிய நீதி நூல், சர்வ சமயக் கீர்த்தனை நூல்களும், முன்சிஃப் பணியாற்றியபோது நீதித் துறை வளர்ச்சிக்காக எழுதிய மொழி பெயர்ப்பு நூல்களும், கடவுள் பெருமையையும், மக்கள் நன்மையையும் பெருக்கு வதற்கான வழிகளிலே ஓய்வின்றி உழைத்த உழைப்புக்களும், ஒரு வழக்கறிஞர் எப்படித் தனது பணியிலே ஈடுபட வேண்டும் என்ற இலக்கண மனச்சாட்சிகளும், அதிகாரி என்பவன் யார்? அவன்