உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி }{}}

துன்பமும், இன்பமும் பிறர் நமக்கு வழங்குவதல்ல: நமக்கு நாமே தேடிக் கொள்ளும் செயல்களின் எதிரொலியே அவை என்றார்.

வேதநாயகர், இறுதிக் காலத்தில் நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். மருந்துகள் அவர் மரணத்தை வெல்லவில்லை. இதனைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட அவர், தனது நண்பர்களான, டிப்டிக் கலெக்கடர் ஒய், கிருஷ்ணாராவ், ஒய்வு பெற்ற தாசில்தார் ஏ. சுவாமி அய்யர், மாயவரம் மாவட்ட நீதிபதி, துணைப்பதிவாளர், ஷெரிஸ்தார். நன்னிலம் நகர் காவல் துறை ஆய்வாளர், நீதிமன்ற சட்ட ஆலோசனைக் குழு கே. லட்சுமண ஐயர், டி.துரைசாமி பிள்ளை, சமஸ்கிருத பண்டிதர் திருவேங்கடாச் சாரியார், வழக்கறிஞர் சக்கரபாணி ஐயங்கார், எழுத்தர், ஆர். வெங்கட சுப்பையர், சமஸ்கிருத ஸ்லோக வித்தகர் கிருஷ்ணாராவ், வழக்கறிஞர் நண்பர் எ. பொன்னுசாமி பிள்ளை, அகோர சாஸ்திரியார், மாயவரம் சுப்பண்ணா ராவ், மிராசுதார் கோதண்டராம ஐயர் ஆகியோர்களுக்கு தனது முடிவை உணர்த்திக் கடிதங்களை எழுதினார்.

கடிதங்கள் கிடைக்கப் பெற்ற அனைவரும், அவர் மரணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து சேர்ந்து ஆற்றமுடியாத மனிதநேய சோகத்தோடு திரண்டிருந்தார்கள்.

கூடியிருந்த தனது நட்புக்குழுவினருடன் இரவு பத்துமணி வரை பேசிக் கொண்டிருந்தார்வேதநாயகம் பிள்ளை. பிறகு, நண்பர்களை எல்லாம் சிறிது நேரம் வெளியே இருக்குமாறு கண்ணீர்த் துளிகளுடன் கேட்டுக் கொண்டார்.

கிறித்துவக் குருமார்கள் வந்தார்கள். அவர்களிடம் தமது ஆத்ம காரியங்களை முடித்துக் கொண்டார். சாவின் அவதிகள் ஏதும்