பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##s. மாயூரம் வேதநாயகம் பிள்ளை

ஒன்றுக்கும் உதவாத கூடு - இதை

உற்றுப் பார்த்தால் வெட்கக் கேடு

இந்த உலகத்திற் பிறந்தார் - முன்னம்

எத்தனையோ பேர்கள் இறந்தார் - பெற்ற தந்தை தாய் பாட்டாரும் பிறந்தார் - நாலு

தாரங்கள் போய் நம்மை மறந்தார்.

-என்று, அவர் நிலையாமையைப் பற்றி எழுதினார். அவர் மனம் நொந்தது மரணத்துக்காக அல்ல - இறையருள் இன்னும்

கிடைக்கவில்லையே என்று ஏங்கி வருந்தினார் வேதநாயகம் பிள்ளை.

வாழ்நாள் முழுவதும் வேதநாயகம் பிள்ளை, உண்மை, ஒழுக்கம், நீதி, அறம், கற்பு, பாசம், பன்பு, அன்பு இவைகளைப்பற்றியே சிந்தித்துக் காலம் கழித்தார். அரிய அரிய செயல்களைச் செய்த பெரியர்களிலே ஒருவராகவே வாழ்ந்தார்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையினையே கொண்டிருந்தார்.

மனித நேயத்தோடும் பரஸ்பர சகோதர பாசத்தோடும், மன நிறைவோடும் உலகமெங்கும் ஒத்துவாழும் வாழ்வே சமாதான் வாழ்வு என்று எண்ணினார்.

கடவுள் வழிபாடு என்பது மக்களுக்கு தனது கடமைகளைச் செய்வது ஒன்றே என்றார்.

வாய்மையைத் தழுவி வாழ்வதே வாழ்க்கை என்று நம்பி மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்தார்.