உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 篮翰5

மீண்டும் அதை மீட்டுவர, மக்களுடைய அறிவாற்றலைத் தூண்டிவிட்டவர் வேதநாயகம்.

சமூக பலத்தைப் பெருக்கி, அறிவியல் தொழிலியல், வணிகவியல், நாகரிகங்களை வளர்த்து. உண்மை. நேர்மை பொதுநல உணர்ச்சி போன்ற பண்பாடுகளின் துணையோடு, காலத்துக்கு ஏற்றவாறு இணக்கத்துடன் செய்து முடிக்கவேண்டும் என்று தமிழ் மக்களுக்குப் போதனை செய்தவர் வேதநாயகர்.

வேதநாயகர் காலத்தில் முஸ்லிம்களிடமிருந்தும் நாயக்கர் களிடமிருந்தும் வெள்ளையர் கைக்கு ஆட்சி மாறியதால், அப்போது குழப்பமும், கொந்தளிப்புமாய் இருந்தது.

சமயத் துறையில் மூட வைராக்கியம், குருட்டு நம்பிக்கை, சாதிக் கட்டுப் பாடுகள், ஆசார அனுஷ்டானங்கள் மக்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருந்தன.

பலதார மணம், குழந்தைத் திருமணம், உடன் கட்டையேறல் போன்ற நரக வேதனைகள் கொடுமைப்படுத்தின சமுதாயத்தில் பெண்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள் பெண் உரிமை, பெண் கல்வி என்ற பேச்சுக்கே அப்போது இடமில்லை. நல்லொழுக்கம் காண்பதே அரிதாக இருந்தது. இந்த இருளைக் கிழித்து வரும் வெண்ணிலாவாக விளங்கினார் வேதநாயகர்.

பெண்கள் கல்வி இல்லாமையால், அறியாமை இருளில் ஆழ்ந்திருந்தார்கள். அவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டிய அவசியத்தை, அவசரத்தை பல பாக்களால், கதையால், கட்டுரையால், தீர்ப்புக்களால், தீர்மானங்களால் வலியுறுத்தியவர் வேதநாயகம்!