உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

அதற்காக அவர் 'பெண்கல்வி' என்று ஒரு புத்தகமே எழுதினார். அடிமைகளைப் போல பெண்கள் நடத்தப்படும் அநீதியை அதனுள் பலமாகக் கண்டித்தார். அதற்காகப் பெண்மானம் என்ற வேறு ஒரு நூலையே எழுதினார். ஆண்களிடம் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும், பெண்கள் ஆண்களிடம் நடக்க வேண்டிய ஒழுங்குகளையும் அவரது, நூல்கள் நேர்மையோடு பேசுகின்றன.

மனைவி அடிமையாகவும், கணவன் எசமானாகவும் இருக்கிற எந்தச்சாதியும் முன்னேறாது என்பதை ஆணித்தரமாகக் கூறியவர்.

பெண்கள் வேலை வீட்டுக்குள்ளே வாசல் கடப்பது பத்தினித் தன்மைக்குப் பாதகம், வாசலைத் துர்த்து மெழுகி, அடுப்பூதி வருவதுதான்் பெண்கள் பழக்கம் என்பதை எதிர்த்து; ஆண்-பெண் ஒருவருடன் ஒருவர் கலந்து பழகவும், துணை நிற்கவும் உழைப்பதே அவசியம் என்று அதற்காக மூன்று நூல்களை 1869 முதல் 1870க்குள் எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.

கி.பி 1858 ஆம் ஆண்டில் நீதி நூல் என்ற புத்தகத்தை எழுதிய வேதநாயகர், அதை 1859-ல் வெளியிட்டார். இந்த நூலை அவர் காலத்தில் வாழ்ந்த 56 பெரும் புலவர்கள். பாராட்டி, பாயிரம்பாடி போற்றினார்கள் என்றால் இந்த நூல் என்ன சாமான்யமானதா?

இந்த நீதி நூல், நாமறிந்தவரையில் 44 அதிகாரங்களை உடையது. 400 செய்யுட்கள் கொண்டது. இதற்கு மேல் 200 பாடல்கள் இத்துடன் சேர்க்கப்பட்டடுமொத்தம் 600 பாடல்களைக் கொண்ட ஒரு திரட்டுநூலாக கி.பி. 1860 ஆம் ஆண்டில் மீண்டும் வெளியிடப்பட்டது.

சித்தாந்த சங்கிரகம் என்ற பெயரில் கி.பி. 1805 ஆம் ஆண்டில் முதல் 1861 ஆம் ஆண்டு முடிய ஆங்கிலமொழியிலே அச்சடிக்கப்