உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}3 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

'பாட்டிடை வைத்தடுறிப் பினானும் பா இன்றெழுந்த கிளவி யானும்

பொருளொடு புணராப் பொய்ம் மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் உரைவகை நடையே நான்கென மொழிக"

-என்று விளக்குகிறார். தொல்காப்பிய சூத்திரத்தைத் தோற்றுவித்தப் பண்டைய இலக்கியங்கள் தற்போது நமக்குக் கிடைக்கவில்லை. காலச் சுழலிலே அவை கரைந்தன மறைந்தன!

ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் போன்றவை புனைந்துரைக்கப்பட்ட கட்டுக் கதைகள். ஆங்கிலத்திலே ரொமான்ஸ் என்றால் கற்பிதக் கதை. இவற்றைப் பொருளொடு புணராப் பொய்ம் மொழி என்பர் தொல்காப்பியர். குத்தல், புகழ்வது போலப் பழித்தல், சுடச் சுட பதிலுக்குப் பதில் போன்ற கேலிப் பரிகாசங்கள் தழுவி, நகைச் சுவை, நையாண்டி மலிந்த வாழ்க்கைச் சித்திரங்கள் முற்காலத்தில் எழுதப்பட்டன.

இவற்றைத் தொல்காப்பியர், பொருளொடு புணர்ந்த நகைமொழி என்கிறார். ஆனால், மிகப் பழங்காலத்திலே வழங்கிய இந்த இலக்கிய வகைகள் தற்போது கிடைக்கவில்லை. கிடைத்திருப்பன தனிப்பாடல்களே. இவை பல்வேறு காலங்களிலே பாடப்பெற்றன; பல்வேறு சந்தர்ப்பங்களிலே பாடப்பட்டன. இவற்றின் தொகுதியே சங்க நூல்கள். பழங்காலக் கவிப் பண்பை அறிதற்குச்சங்ககால நூல்களே முக்கியமான கருவி. ஆனால், பழங்கால வசன நடையை அறிவிக்க வல்ல நகை மொழிகளும். பொய்ம் மொழிகளும் கிடைக்காமற்போனது நமது துரதிர்ஷ்ட்டமே.