பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமன்னி 羅翰9

சங்க காலத்துக்குப் பின் வந்த தமிழ்ப் புலவர்கள் தனிப்பாடல்களைத் தவிர்த்துக் காவியங்களைப் பாடினார்கள். காவியங்களைப் பின்பற்றிப் புராண இலக்கியம் எழுந்தது. ஐரோப்பியரான வீரமாமுனிவரும், முஸ்லிம் மதம்சார்ந்த உமறுப் புலவரும் இயற்றிய தேம்பாவணி, சீராப்புராணங்களே. புராணங்களைத் தழுவி அந்தாதி, கலம்பகம் போன்ற பிரபந்தங்கள் எழுந்தன. உரைவகை நடையே நான்கென மொழிப் என்ற பழைய வசன நூல்களின் வாசனை கூட இப்போது இல்லை.

உரையாசிரியர்கள் பழைய நூல்களுக்கு எழுதிய குறிப்புரை விளக்கவுரைகளே. தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் ஆதிவசன

நடைகள். முதல் வசன நடை நூல் வித்தகர் வேதநாயகர்:

மக்கள் வாழ்வு, மனவுணர்ச்சி, குண விசேடங்களை முற்றும் தழுவி, வாழ்க்கையின் சாயலாய் அமைந்த வசன நூல்களை முதன் முதலில் தமிழில் எழுதியவர் வேதநாயகம் பிள்ளையே.

இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரமும், சுகுணசுந்தரியும் கற்பிதக் கதைகளே. இவற்றை இவர் உருவாக்குவதற்கு முன்னமே. தாண்டவராய முதலியார் பஞ்சதந்திரக் கதையை எழுதினார். பின்னர், வினோத ரச மஞ்சரி என்ற வசன நடை நூல் வெளியாயிற்று. இது ஒரு கட்டுரைத் தொகுதி. இதை எழுதியவர் அட்டாவதான்ம் வீராசாமிச் செட்டியார் ஆவார்.

பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்றி, ராஜமையர் கமலாம்பாள் என்ற நூலை எழுதினார். பிறகு, பத்மாவதி என்ற நூலை மாதவையர் படைத்தார். அதற்குப் பிறகு வந்த சில நூல்கள் காற்றிலே பறந்த பஞ்சு போலாகிவிட்டன. இவை பலவும் மொழி பெயர்ப்பு நூல்களே இந்தி, மராடம், வங்கம் அனைய