உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蛋篮酸 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

வடமொழிகளில் அமைந்த குப்பைக் கூளங்கள் கூடத் தமிழிலே பெயர்க்கப்பட்டு விட்டன. தான்ாக, சொந்த முயற்சி அறிவிலே சமைந்த நவீனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

நவீனம் என்றால் என்ன?

கவிதையைப் போல பார்த்ததும் எழுவதல்ல நாவல். உணர்ச்சி பொங்கிய ஆவேசத்திலே உருவாகுவதுமல்ல, நாவலை எங்கே ஆரம்பிப்பது? எப்படி நடத்துவது? எப்படி முடிப்பது என்பதைப் பற்றியதே அதன் வெற்றி.

முதன்மையான நாவலிலே மூன்று முக்கிய பண்புகளைப் பார்க்கலாம். கதையின் அமைப்பு, மனதைக் கவர்கின்ற பரபரப்பான சம்பவங்களும், நெருக்கடியான நிலைமைகளும் நிரம்பியதாய்க் கதை அமைய வேண்டும். கதையின் நிகழ்ச்சிகள் விறுவிறு என்று நடந்து, மேலும் என்ன என்ற ஆவலைத் தூண்ட வேண்டும். நாவலிலே இயங்கும் பாத்திரங்கள் நம்மைப் போன்ற மானிடரே.

நமது கனவுகளை, லட்சியங்களை, உணர்ச்சிகளை பாத்திரங்கள் எதிரொலிக்க வேண்டும். பாத்திரங்களின் நடை, உடை, பேச்க் ஒவ்வொரு சிறு விவரமும் செய்தியும் வாழ்க்கையைப் பிரதி பலிக்கவேண்டும். நல்ல நாவலிலே அழகு, இனிமை, எளிமை வாய்ந்த பெருமித இலக்கிய நடையைக் காணலாம்.

வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் இந்தப் பண்புகளை திட்ட வட்டமாக எதிரொலிக்கும் છે(5 சாதனையைக் காணலாம்.

இதன் நடை உயிர் உடையது. கதை ஒட்டம் உடையது. கதைப் பாத்திரங்களோ நம்முடன் தினந்தோறும் வந்து வந்து பேசும்