உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி #13

துண்டி, அல்லது திடுக்கிடும் சம்பவங்கத்ை திணித்து, எழுதுகிறார்கள்.

ஆனால், வேதநாயகம் பிள்ளை கனிந்த அவருடைய கற்பனையிலும், முதிர்ந்த அனு பவத்திலும், தெளிந்த புலமையிலும் உருவாக்கிய பிரதாப முதலியார் சரித்திரம் வாழ்க்கையை எடுத்துக் காட்டி, நாம் வாழ்வதற்கு உதவுகிறது. வாழ்க்கைச் சிக்கல்களை அலசி, அவற்றைத் தீர்த்து வைக்கிறது. அனாயாசமாக அறிவூட்டி, இதயத்தை எளிதிலே நெகிழ வைத்து, ஆன்ம வளர்ச்சிக்கு உதவுவதிலே பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு இணையாகவேறு நூலைக் கூற முடியாது.

இவ்வளவு அரிய சாதனைகளை வேதநாயகம் பிள்ளை தமது புதினத்திலே செய்து காட்டி அந்த நூலை வரைந்துள்ளார்.

சுகுண சுந்தரி

வேதநாயகம் பிள்ளை தமிழில் எழுதிய இரண்டாவது நாவல் இது. இந்நூல் 1887 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலும் முதல் நூலைப் போல ராஜாராணி மரபிலேயே எழுதப்பட்ட நூலாகும்.

வேதநாயகரின் முதல் கற்பனைக் கதையான பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நூலில் ஏறக்குறைய ஆயிரம் பழமொழிகள் இடம்பெற்றுள்ளதைப் போல சுகுண சந்திரியில் அவ்வளவு இடம் பெறவில்லை.

சுகுணசுந்தரி என்ற புதினத்தில் பால்ய விவாகக் கொடுமை, ஏன் பெண்கல்வி வேண்டும் ஆன்மிக அறிவுரைகள் போன்ற சமுதாய முற்போக்குக் கருத்துக்களை அப்போதே சிந்தித்ததற்கு அடையாளமாக வேதநாயகர் வீர-உலா வருகிறார்.