உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்

தமிழ் நாடு வளர்த்த கலைகளிலே இசை என்பது தலை சிறந்த ஒன்று. இது மிகவும் சிறந்த, மேன்மையான கலை என்பது மட்டுமல்ல, கல்லையும் கனியவைக்கும் சக்தி பெற்றது. இதனைச் சங்கீதம் என்பர் சிலர், கவின் கலை என்பர் பலர் தமிழர் இதனை யாழோர் மறை என்பர் வேறுசிலர் கந்தருவ வேதம் என்றும் கூறுவார்கள்.

பாடல், இசை, நாட்டியம் என்ற மூன்றும் சேர்ந்ததே சங்கீதம். இப்போது நாட்டியம் தனி சாதியாக்கப்பட்டு விட்டது. பாடலும் இசைக்கருவிகளும் இணைந்ததே இப்போது சங்கீதம் எனப்படுகிறது.

தமிழ்நாட்டுப் பாணர்கள், விறலியர்கள் மன்னர்களை, மிராசுகளை, ஜமீன்களை, குறுநில அரசர்களை, செல்வ ர்களை நாடிச் சென்றே பாடல்பாடி, யாழிசை இசைத்து பரிசுகளைப் பெறுவார்கள். தமிழ் மக்கள் இடையே இசை ஞானம் சங்ககாலத்தில் மேம்பட்டிருந்தது.

ஆனால், இசைக்கென்றும், நாடக, நாட்டியத்திற்குமாக அமைந்துள்ள சிலம்பு நூலில் கூறப்படும் இசைவகை, அதன் வளம், விரிவுகள், பிரிவுகளைப் பார்க்கும்போது நாம் வியப்படை கின்றோம். பழந்தமிழ்ப் பண்கள், உருக்கள், திறங்கள், உருமாறி, பெயர்மாறி, பிறகாலத்தில் அது கருநாடக சங்கீதமாக மாற்றப்பட்டு விட்டது. தமிழ் இசைப் பெருமை தரை மட்டமாய் தேய்க்கப்பட்டு விட்டது.

கருநாடக சங்கீதத்திலே சாகித்தியங்களை வகுத்துப் புகழ் பெற்றவர்கள் சியாமா சாஸ்திரி, தியாகையர், முத்துசாமி தீட்சத்ர். இவர்கள் 18-19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இசைத்துறை