பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i3 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

கீதம் கீதங்களுக்கே வேராக விளங்கியது. இவருடைய பாடல்கள் ல கீதங்களின் வளர்ச்சியைப் பார்க்கிறோம்.

ုံို

بينية

G

சருவசமையக் கீர்த்தனைகள்

வேதநாயகம் பிள்ளையின் கீர்த்தனைகள், இயல் தமிழுக்குரிய இலக்கண அமைதிகளுடன், இசையமைதியும் பொருந்தி, சன்மார்க்கத்தை வளர்ப்பன பாடுபவரையும் கேட்பவரையும் பரவசப்படுத்துபவன. அதனால் அக்காலத்திலே எங்கெங்கு விழாக்கள் நடக்குமோ, அங்கங்கே இவருடைய கீர்த்தனைகளைப் பாடும்படி சபையோர் விரும்பினர் பாடுதற்கு இசைவாணரும் ஆசைப்பட்டர்கள். சங்கீத சாகித்திய வித்துவான்கள் அவற்றை ஆச்சரியப்பட்டுப் போற்றினார்கள்.

8

உத்தியோகத்தர்களும், வழக்குரைஞர்களும் சங்கீத ஞானம் உள்ளவர்களும் தாமே மனப்பாடம் செய்து ஆர்வம் ததும்ப

அவற்றைப் பாடுபவரர்கள். அவரவர் குழந்தைகளுக்கும் கற்றுக்

இத்தகைய பணிகளால் கீர்த்தனைகளின் எளிய நடை, இனிய இசைப் பெருக்கு தொடர்ந்த பொருட்சிறப்பு முதலிய அழகிய அமைப்புகளாலும் அவை, தமிழகம் முழுவதும் அந்தக் காலத்திலே

பெருகி வழங்கின.

அப்போது நடந்து கொண்டிருந்த தாது வருடத்திலே கொடிய பஞ்சம் வந்தது. வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கஞ்சித் தொட்டிகளை அமைப்பித்து, வேதநாயகம் நாள் தோறும் கஞ்சி வார்க்கச் செய்தார். அதனால், பல ஏழைகள் உயிர் பிழைத்தார்கள். வேதநாயகம் பிள்ளையின் சாதனையைக் கண்ட கோபால கிருஷ்ண பாரதியார் என்ற மேதை, நீயே புருஷமேரு' என்று தொடங்கும் கீர்த்தனையைப் பாடி மக்களையும் மகிழச் செய்தார்.