பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி . | 19

அதே நேரத்தில் பஞ்சத்தைப் பற்றி வேதநாயகம் பிள்ளை பாடிய இசைப் பாடல் அக் காலத்தில் தன்னிகரற்று விளங்கியது: மக்கர் ஆதரவு பெருகியது. கோபாலகிருஷ்ண பாரதியாரும் இந்தப் பஞ்சப் பாடலை மக்களிடம் இசையமைதியோடு பாடி மகிழ்வித்தார். அப்பாடல் இது;

திசிரசாதி - மத்திய தாளம். இராகம் : உசேனி

பல்லவி

பஞ்சம் தீர் ஐயா உனை அன்றித்

தஞ்சம் ஆர் ஐயா (-பஞ்சம்தீர்)

அனுபல்லவி வஞ்சக மேகம் உலோபர்கள் போல

மண்ணில் மழை பொழி யாமையினாலே சஞ்சல மாகித் தளர்ந்தோம் மேன்மேலே

சாமி கதி உன்தன் தாமரைக் காலே (-பஞ்சம் தீர்)

சரனம்

எட்டு நாள் பத்துநாள் பட்டினியோடே

இடையிலே கந்தை இருக்கையில் ஒடே ஒட்டி உலர்ந்த உடல் என்புக் கூடே

ஒரு கோடிபேர்கள் வசிப்பது நாடே

ஊரும் இல்லாமல், குடிக்கத் தண் நீரும் இல்லாமல், - அன்னம் எனும்

பேரும் இல்லாமல், - பசி தீர்க்க