உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i25 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

ஆரும் இல்லாமல்

பாரில் அனேகர் பரதேசி ஆனாரே

ஊரில் அனேகர் உயிர்மாண்டு போனாரே!

-பஞ்சம்தீர் ஐயா

இந்தப் பாடல் தாது வருஷப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனத்தைரியத்தைக் கொடுத்தது. பஞ்சத்தை எதிர்த்துப் பணம் திரட்டிடும் ஊக்கத்தை ஊட்டியது. பஞ்சத்தை எதிர்த்து வேதநாயகம் பிள்ளையின் பாடலை பஞ்ச எதிர்ப்புப் பரணியாக, பாடியபடியே அவர்கள் ஊர் தோறும் வலம் வந்து கஞ்சித் தொட்டிகளைக் கண்காணித்தார்கள்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் இவ்வளவு சாதனைகளும் தமிழ் மக்களுக்கு பெரும் விழிப்பை விளைவித்தன. எண்ணி லடங்கா செயல்களை ஒழுக்கத்தின் சீலத்திலே, அறத்தின் அடிப்படையிலே, மனிதநேய சகோதரத்துவ மாண்பிலே; தாய் மொழிக்காக தளராமல் பணிகளிலே அவர் ஈடுபட்டு ஓயாத உழைப்பிலே ஒடாய் தேய்ந்து இறுதியிலே தனக்கென எந்தச் சுகபோகத்தையும் நாடாமல், நாட்டுக்காக, மொழிக்காக தமிழர்களுக்காக செயற்கரிய செயல்களைச் செய்து மறைந்த மாவீரர் மாயூரம் முன்ஃசிப் வேதநாயகம் பிள்ளையை எந்தத் தமிழனும் மறக்கமாட்டான் வாழ்க வேத நாயகர் திருப்பெயரும், திருத்தொண்டும்!

3.

Že