உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

彗亭 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மண்ணிலே இயேசு சங்கத்தை ஆரம்பித்தார். அப்போது தஞ்சையிலே மராட்டிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஷாஜி என்ற அந்த மராட்டிய மன்னன் கிறித்தவர்களுக்கு கொடுமைகள் பல செய்தான்். அவனது கொடுமைகளை அனுபவிக்க முடியாமல் Father Joseph, Carvalto, Father Michael Quiri GLIrölä என்பவர்களில், முன்னவர் சிறையிலேயே மாண்டார். பின்னவர், கடுமையான சித்ரவதைகளுக்கும் ஆளானார்.

இதே நேரத்தில் சேதுநாடு பகுதிகளை அரசு புரிந்த கிழவன் சேதுபதி என்ற குறுநில மன்னனது ஆட்சியிலே ஜான்.டி.பிரிட்டோ (lot ) Brite) என்பவர் பதைபதைக்கப் படுகொலை செய்யப் பட்டார். இந்தச் செய்தி மறவன் சீமை முழுவதும் பரவி ஒருவித பரபரப்பை உருவாக்கியது. இதுபோன்ற பரபரப்பூட்டும் சம்பவங்களால், இயேசு சங்கம் நூறே ஆண்டில் ஒன்றரை லட்சம்

மக்களைக் கிறித்தவர்களாக்கியது.

ぎ*

ಫಿಟಿ

o

|வ்வாறு, தமிழ்க் கிறித்தவர்களானவர்கள், ராமைய நாயக்கண்பட்டி, மலையாண்டிப்பட்டி, ஆவூர், வடுகர்பட்டி, ஏலாக்குறிச்சி, ஐயம்பேட்டை போன்ற கிராமங்களிலே இயேசு சங்கத்தை உருவாக்கினார்கள்.

கிறித்துவ சமயத்தைப் பரப்பவந்த பாதிரிமார்கள், தமிழ்நாட்டுப் பண்புப்படி மது, மாமிசங்களை மறந்தார்கள். ஐரோப்பியப் பெயர்களை மாற்றி தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொண்டார்கள். பெங்கி, வீரமாமுனிவர் ஆனதுபோல.

தமிழத் துறவிகளைப்போல, கமண்டலம், ஏந்தி, குண்டலம் பூண்டு, காவியுடுத்தி பிரச்சாரம் செய்தார்கள்.இப்படிப்பட்ட ஆவூர் இயேசு சபையிலேதான்் வேதநாயகம் பிள்ளையின் முப்பாட்ட னாரான மதுரை நாயகம் பிள்ளையும் ஞானஸ்நானம் பெற்றுக் கிறித்தவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.