உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 貰を

மதுரை நாயகம் பிள்ளையின் வழிவழிமுன்னோர்கள் வேளாண் குளத்தூரில் செந்தமிழ் வேந்தர்களுக்கு முடிசூட்டும் விழாக்களிலே முதன்மை அதிகாரம் பெற்றவர்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த நாடு கோனார் என்ற பெயரைப் பெற்றது என்பதை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனது குளத்துர் கோவை என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார். அந்த மரபிலே வழிவழியாக வந்தவர் நமது மாயூரம் முன்சிஃப் வேதநாயகம் பிள்ளை ஆவார்.

வேதநாயகம் கல்வி அவர் நூல் பேசுகிறது!

“முகக் கண்கள் இருந்தும், சூரிய ஒளி இல்லாவிட்டால் பயன் உண்டா? அதுபோலவே அகக் கண்ணுக்கு எண்ணும் எழுத்தும் ஒளியூட்டுவனவாகும். கல்வி தான்் அகக்கண்களுக்குரிய ஒளி.

வயல் நிலங்களை உழுது, வெட்டித் திருத்தி, விதைத்து, நீர்ப்பாய்ச்சி, களையகற்றி சாகுபடி செய்கிற நிலம் மட்டுமே பலன் கொடுக்குமே அல்லாது; சீர்திருத்தம் செய்யப்படாத வயல் பயன்தருமா? திருத்தாத நிலம், கல்லும் முள்ளும், புல்லும் புதருமாகப் பெருகிக் கெட்டுப் போவது போல, கல்விப் பயிற்சி இல்லாத மனம், தீயக் குணங்கள் நிறைந்து கெட்டுப் போகாதா? என்று வேதநாயகம் பிள்ளை தான்் எழுதிய தமிழ்மொழியின் முதல் நாவலான "பிரதாப முதலியார் சரித்திரம்" என்ற நூலில் தான்் கற்ற கல்வி எப்படி அமைந்தது என்பதை அவரே, முதலியாரை விட்டு நம்மிடையே பேசவைத்து விளக்குகிறார். இதோ முதலியார் பேசுகிறார்.

“எட்டாம் வகுப்பு எட்டிப் பார்க்கிறவரை, நான் படிப்பருமை தெரியாதவனாக இருந்தேன். என் தாயாருடைய நச்சரிப்புப் பொறுக்க முடியாமல், எனது தகப்பனார் என்னை ஒருநாள் அழைத்து, "உனது அம்மா உன்னைப் பள்ளியிலே படிக்க அனுப்பிவைக்க வேண்டும் என்கிறாள். நீ என்ன கூறுகிறாய்?" என்று கேட்டார்.