பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

7

என்.வி. கலைமணி

எந்தவிதக் கட்டுப்பாடும், கெளரவக்குறைவும் இல்லாமல் வளர்ந்த வேதநாயகம் சிறு பருவத்திலேயே கூர்மையான அறிவும், சமயத்திற்கேற்றவாறு நடக்கும் தந்திரோபாயமும், விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றவாறு, அவரது ஒழுங்கும் ஒழுக்கமும், உண்மையும் உணர்ச்சியும் கண்டவர்கள் பிற்காலத்திலே மக்கள் போற்றுமாறு புகழ்பெறுவான் என்று நம்பினார்கள்.

மக்கள் நம்பிய நம்பிக்கைக்கு ஏற்றவாறு வேதநாயகம், நாளடைவில் நற்குண நற்செயல்கள் உள்ளவராயும் விவேகமும் வித்தகமும், எல்லா மத இன மக்களும் போற்றுமாறு சமயச் சார்புடைய சன்மார்க்கராயும் வளர்ந்தார்; மேன்மை பெற்றார்: அதற்குக் காரணம் அவரது பெற்றோர் வளர்த்த, காட்டிய ஆரம்பகால இளமைக்காலப் பயிற்சியே ஆகும்.

இளமைப் பருவக் காலத்திலே அவர் தனது பெற்றோர் களிடத்தும், மற்றவர்களிடத்தும், தமிழ் கல்வி கற்றார். ஒரளவு பெற்ற தமிழ்க் கல்வியைக் கொண்டே ஆங்கில மொழியையும் கற்றார். அப்போது வயது பதினொன்று: அக்காலத்தில் ஆண் பாடசாலையோ பெண் பாடசாலையோ கிடையாது. இங்கிலீஷ் மொழி கற்றவர்களும் மிகச் சிலரே!

திருச்சிராப்பள்ளி என்ற மாநகரிலே தியாகப் பிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர், இங்கிலீஷ் தமிழ் இரு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றக் கல்வியாளர். தென் மாநில நீதிமன்றத்திலே அவர் ஆங்கிலம்-தமிழ் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி னார். அவர், வேதநாயகம் தந்தையான சவரிமுத்துப் பிள்ளைக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார்.

சவரிமுத்துப் பிள்ளை பரிந்துரை காரணமாக வேதநாயகம் தியாகப் பிள்ளையிடம் ஆங்கிலம் கற்று வந்தார். விரும்பியபடி