உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j $ மாயூரம் வேதநாயகம் பிள்ளை

எழுதிட, பேசிட அந்த இரண்டு மொழிகளிலும் நல்ல வல்லவராய் விளங்கினார். ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் தமிழில் பாக்கள் எழுதவும், செய்யுள் புனையவும் ஆர்வம் காட்டி நாள்தோறும் எழுதிவந்தார். அதனால், அவரை இளம்கவிராயர் என்று கிறித்துவ மக்களும், வேதநாயகர் நண்பர்களும் அழைத்து உற்சாகமூட்டி வந்தார்கள்.

அவர்களது உசுப்பலுக்கு ஏற்றவாறு வேதநாயகம் இலக்கண, இலக்கிய, சமுதாய உணர்வுகளைப் பிழையின்றியும், வேடிக்கையாகவும் கிண்டலாகவும், நகைச்சுவையாகவும், குத்தலாகவும், கண்டனமாகவும், அறிவுரையாகவும், நலுங்குப் பாடலாகவும், நாடகப்பாடலாகவும், இசையாகவும், வசையாகவும் பலவாறு பாடிப்பாடி, அதுவும் சம்பவ உணர்ச்சிகளுக்கு ஏற்றாற் போல 'பா' இயலின் இயல்பறிந்து இலக்கியப் பண்புடன் பாடிக்கொண்டே இருந்தார். இதோ பாருங்கள் வேதநாயகம் பிள்ளை பாடும் திருமண நலுங்குப் பாடலை; அதாவது கலியான நிகழ்ச்சியின் போது மைத்துனரைப் பரிகாசிக்கிறார்; மாப்பிள்ளையை விடப் பரிகாசத்துக்குரியவர் வேறு யார்?

மைத்துனரே

இன்று முதல்

மகராசர் நீரே.

கொத்தார் குழலி

எங்கள் குயிலைக்.

கொண்டீரே - மைத்துனரே....

உழவுத் தொழில் செய்துமக்(கு)

உடம்பெல்லாஞ் சேறு

ஊத்தை கழுவப் பற்றுமோ ஒன்பதாறு.