உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

அதனால் கடவுள் இல்லை; உலக சுகமே சுகம் என்ற உலகாயுத எண்ணங்கள், பக்திக்கு வளர்ப்புப் பண்ணையான தமிழ் நிலத்திலும் தலை எடுத்து, மேற்கண்ட பகுத்தறிவு வாதிகள் உலகுக்கு ஒரு மதம் அவசியந்தான்் சமய உணர்வு இல்லாவிடின் ஒழுக்கம் கெடும் என்று ஒப்புக் கொண்டார்கள்.

காலின் (Colin) என்பவர் ஒரு நாத்திகர்; அவர் தம்முடைய வேலைக் காரர் தம்மைக் கொலை செய்யாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக அவர்களைக் கோயிலுக்குப் போகும்படி வற்புறுத்தினார்.

அக்சிலி - Huxley என்பவர் மற்றொரு நாத்திகர். பைபிளைப் பள்ளிக் கூடங்களிலே பயிற்றுவிக்க இவர் முன்வந்தார். சமய விரோதி என்று தம்மைச் சொன்னால் டிண்டால் - Tindal சண்டைக்கு வருவார். இவ்வாறு இவர்களது சொல்வேறு, செயல் வேறாக இருந்தது. ஆனால், இவர்களைப் பரமகுருவாகக் கொண்ட நம்மவர் நாகரிகம் என்று இங்கிலீஷ்காரர் நடையுடை பாவனைகளைக் கடைப்பிடித்து வந்தனர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கொள்கையில் முனைந்து நின்றார்கள். இவர்களுக்கு மாறாக, வேத நாயகம், ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு என்று கடவுள் பக்தியோடு சமய உணர்வும் உடையராய் ஒதிய நெறியிலே நின்று ஒழுக்கத்திலும் உயர்ந்தார்.

கல்வியின் பயன் என்ன? வேதநாயகம் பிள்ளையைக் கேட்டதற்கு அவர்கூறிய பதில் என்ன தெரியுமா? கடவுளை அறிவதுதான்் கல்வியின் பயன் என்றார்.

மறைகள், வேதங்கள் , இதிகாச நூல்கள், புராணங்கள் எல்லாமும், சமயவாதிகள் அனைவரும் கூறுவதும் கடவுள் என்ற பொருளைத் தவிர வேறு எதுவுமல்ல. சிறந்த கல்வி மானுக்குத் தெய்வ பக்தியே சிறந்த லட்சணமாகும்.