உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 23

'ஒவ்வொரு நிமிடமும் கடவுளிடத்திலே நாம் பெற்றுக் கொள்கிற உபகாரங்களுக்குக் கணக்கு உண்டா? நாம் உண்பது அவருடைய அன்னம் அணிவது அவருடைய வஸ்திரம், குடிப்பது அவருடைய சலம், நாம் வசிப்பது அவருடைய வீடு, சஞ்சரிப்பது அவருடைய பூமி, நாம் சுவாசிப்பது அவருடைய சுவாசம், நாம் காண்பது அவருடைய பிரசாசம், நாம் அனுபவிப்பது அவருடைய சுகம்; இந்த சகல சுகங்களை அனுபவிக்கிற நமது தேகமும்; பஞ்சேந்திரியங்களும் ஆத்மாவும் அவருடைய கொடை, அவருடைய கிருபை இல்லாவிட்டால் ஒரு நிமிடம் நாம் சீவிக்கக் கூடுமா?

கடவுள் நம்மை நடப்பிக்கா விட்டால், நாம் நடக்கக் கூடுமா? பூமியைப் பார்த்தாலும், ஆகாசத்தைப் பார்த்தாலும், எங்கே பார்த்தாலும், எங்கே பார்த்தாலும், அவருடைய உபகார மயமே அன்றி வேறுண்டா? ஆகாயம் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன; சமுத்திரத்திலே பிறந்து மீன்கள் போலக் கடவுளது கிருபா சமுத்திரத்துக் குள்ளாகவே நாம் ஜனித்து வளர்ந்து வாழ்கின்றோம்

என்றார்.