உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஐகோர்ட் தீர்ப்புக்களை தமிழில் நூலாக்கினார்!

இப்போது நமது பிள்ளைக்கு என்ன வயது தெரியுமா? இருபத்திரண்டு! ஆங்கிலத்திலும், தமிழிலும் பெரும் புலமை பெற்றிருந்ததாலும், புத்திக் கூர்மையுள்ளவராகத் தெரிந்ததாலும், மேஸ்தர்கார்டன் என்பவர், முதன்மை நீதிபதியாக திருச்சி மாநகரில் 1838 ஆம் ஆண்டில் பணியாற்றியவர், அவர் வேதநாயகத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு திருச்சி நீதிமன்றத்தின் பணி மனையிலே பத்திரப் பாதுகாவலராக அவரை நியமித்தார்.

அதே நேத்தில் கி.பி. 1850 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்ட

நீதிமன்றத்திலே மொழிபெயர்ப்புப் பணி காலியாக இருந்தது. பத்திரப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த வேதநாயகம், அக் காலியிடத்துக்கு விண்ணப்பம் செய்தார். வேறுசிலரும் அதே பணிக்கு மனுப்போட்டிருந்தார்கள். மேஸ்தர்பாய்லோ மாவட்ட நீதிபதி. அவர் நேர்மையானவர், திறமையானவர், மேஸ்தர் பாய்லோ மனுப்போட்வர்களை எல்லாம் அழைத்து நேர்முக விசாரணை நடத்தினார். மொழி பெயர்ப்பாளராக வேதநாயகம் பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிலே முதன்மைத் தகுதியோடு நியமனமானார். இதனால் வேதநாயகத்துக்கு, பல நீதிபதிகளின் அன்பும் ஆதரவும் கிடைத்தது.

திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலே தமிழிலே உள்ளதை ஆங்கிலத்திலும், இங்கிலீஷில் உள்ளதைத் தமிழ்படுத்து