பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 29

தொடர்ந்து சூழந்து வேதனைப் படுத்தியது. இவற்றை எல்லாம் கர்த்தர் இயேசு பெருமான் மீது பாரத்தைப் போட்டுப் பிரார்த்தனை யோடு ஜபம் செய்து வந்தார். இதனால், அவர் துன்பம் தான்் ஞானத்தின் பள்ளிக் கூடம், துன்பப் படாதவன் யோக்யனாக முடியாது என்ற சித்தாந்த வாதியானார்.

'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்', 'முயற்சி திருவினை யாக்கும்', மெய்வருத்தக் கூலியையாவது கொடுக்கும் என்பதிலே திடமான நம்பிக்கை வைத்த வேதநாயகர், மீண்டும் சதர்ன் கோர்ட்டாருக்கு தனது நிலையை ஆதியோடந்தமாக விளக்கி விண்ணப்பம் செய்து கொண்டார்.

அந்த நேரத்தில்தான்், மறைந்த மேஸ்தர் டேவிட்சனின் பெட்டியிலே முன்பு வேதநாயகர் கொடுத்திருந்த காணாமல் போன கலக ஆவண மொழி பெயர்ப்புக்கள் எல்லாம் கிடைத்துவிட்டன என்றும், வேத நாயகம் மீண்டும் வேலையில் சேரலாம் என்ற பணிஉத்திரவும் அவருக்கு வந்து சேர்ந்தது.

வேதநாயகர் பணி நீக்கம் செய்யப்பட்ட இடத்திலே அவருக்குப் பதிலாகப் பணியில் அமர்த்தப்பட்டவன், அவர் மீண்டும் பணியில் சேர முடியாதபடி பொய் புனைந்துரைப் பழிகளைச் சுமத்தி, வேதநாயகம் நோயாளியாகி விட்டதால் அவரால் மீண்டும் வேலைசெய்ய முடியாது என்றும் சதர்ன் கோட்டுக்குக் கடிதம் எழுதிவிட்டான்.

கலகம் செய்தவனுடைய பொய்யுரைகளை விளக்கி மீண்டும் வேதநாயகர் மேஸ்தர் சுவிண்டனுக்குப் பதில் மனு கொடுத்தார். கலகக் காரனுக்கு சுவிண்டன் மிகவும் வேண்டியவன் என்ப்தால், அவன் சதர்ன் கோர்ட்டாருக்கு வேத நாயகர் நோயாளியே என்று விதண்டாவாதப் பிடிவாதமாக மீண்டும் கடிதம் எழுதினான்.