பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி $3

ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரும், டிப்டிக் கலெக்டராக இருந்த திவான் பகதுர் ரகுநாதராவும், அவர்கள் வாழ்ந்த காலத்திலே பெயரும் புகழும் பெற்றார்கள். அவ்வளவு தான்். ஆனால், வேதநாயகரைப் போல பல்கலை வித்தகராக விளங்கி இறவாப் புகழ் பெற்றவர்கள் அல்லர்

கி.பி. 1857 ஆம் ஆண்டில், தரங்கம்பாடி என்ற ஊரிலே, வேதநாயகர் முதன் முதலாக முன்சிஃப் பதவியை ஏற்றார். அப்போது, தரங்கம்பாடி நகரும், அதனைச் சூழ்ந்த கடற்கரை ஊர்களும் 200 ஆண்டுகளாக டேனிஷ்காரர்கள் ஆட்சியிலே இருந்தன. வேதநாயகர் பதவி ஏற்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான்், அந்தப் பகுதிகள் யாவும் ஆங்கிலேயருக்குச் சொந்தமாயின. சிறந்த வணிகக் கேந்திரமாக விளங்கிய அந்தத் தரங்கம்பாடி என்ற சிறு நகர் இன்று சீரழிந்து சிறு கிராமமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

தரங்கம்பாடி கடல் சூழ்ந்த பிரதேசப் பகுதிகளுக்கு முன்சிஃபாக நியமிக்கப்பட்ட வேதநாயகர், பிறகு மாயவரம் மாநகர் முன்சிஃபாக மாற்றப்பட்டார். வேதநாயகம் நீதிபதியாக மாயவரம் வந்து பணியாற்றிய சில மாதங்களுக்குள்ளேயே அவர் நேர்மையான நீதிபதி, திறமையான நீதிபதி, மனித சமத்துவ எண்ணம் கொண்ட நீதிபதி, ஒழுகமான நீதிபதி, என்ற புகழைப் பெற்றார். இந்தப் புகழ்கள் பெருகப் பெருக ஆங்கிலேயர்களும், பொதுமக்களும் இவரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்துப் பழக ஆரம்பித்தார்கள் அதற்குப் பிறகு சப்-ஜட்ஜ் வேலைக்கும் இவரே தகுதியானவர் என்று ஆங்கிலேயரால் பரிந்துரை செய்யப்பட்டார்.

மாயூரம் முன்சிஃப் வேதநாயகரிடம் நியாயம் கிடைக்கின்றது என்ற உணர்ச்சி மக்களிடம் பரவியது. அதனால், மற்ற நீதிமன்றங்களிலே வழக்குத் தொடுத்திருந்த வழக்காளர்களில் பெரும் பகுதியினர், அவரவர் வழக்குகளை மாயூரம் நீதி