உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மன்றத்திற்கே மாற்றுமாறு, மாவட்ட நீதி மன்றத்திற்கு மனுப் போட்டபடியே இருந்தார்கள். சில வழக்குகள் அவ்வாறே விசாரணைக்கு வந்தன.

மக்கள் உணர்ச்சி இவ்வாறிருக்க, மற்றவர்கள் இந்தப் புகழைக் கண்டு பொறாமைப் பட்டார்கள். அதனால், வேதநாயகர் மீது பலருக்கு பகையும், விரோதமும் ஏற்பட்டது.

வேதநாயகரின் நீதி மன்ற வாயிலிலே மக்கள் திரண்டார்கள். வழக்கு விசாரனைகளைக் கவனிப்பார்கள். 'எப்போ வருவாரோ ஏழைக் கிரங்கிடும் நீதிபதி வேதநாயகர் என்று பர்ட்டு எழுதிப் புகழும் அளவிற்கு அவர் மக்களிடம் நற்பெயர் பெற்றார்.

கி.பி. 1872 ஆம் ஆண்டு நெல்சன் என்பவர் மாவட்ட நீதிபதியாக இருந்தார். புதிதாக வந்த நீதிபதியை வேதநாயகர் சென்று வரவேற்கவில்லை. காரணம் என்ன?

தன்னுடைய தகுதி தரங்களைப் புதிதாக வரும் மேலதிகாரிகள் அறிந்து. புரிந்த பின்பே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர் வேதநாயகர். அதனால், வந்த புதியவரை அவர் உடனே சென்று பார்க்கவில்லை.

ஆனால், வேதநாயகர் மக்கள் தொண்டு நேர்மையாக நடப்பதால் அவரது புகழ் மீது அழுக்காறு கொண்டவர்கள். வேதநாயகர் மீது கோள் கூறியதால், அந்தக் கோள் புதுநீதிபதிக் கும் வருத்தத்தை உருவாக்கியதால், முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் திடீரென்று மாயூரம் நீதிமன்றத்தைப் பரிசோதனை செய்ய புதியவர் வந்தார்.

அப்போது வேதநாயகர் உடல் நலமின்றி இருந்ததால், அவர் கீழ் பணிபாற்றுவோரின் பணிகளைச் சரிய்ா-இல்லையா என்று பார்வையிட்டுச் சோதிக்க நேரமில்லை. அதனால், புதிதாக வந்த